பழிசுமத்துவதை நிறுத்தி பொருட்களின் விலை குறைபாடுகளை நிவர்த்திசெய்ய வேண்டும்- அரசாங்கத்தை வலியுறுத்தும் கரு

Published By: Digital Desk 2

10 Jul, 2021 | 09:38 AM
image

நா.தனுஜா

நாடளாவிய ரீதியில் உணவுப்பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும்போது, வர்த்தகர்கள் பொருட்களைப்  பதுக்கிவைப்பதே அதற்குக் காரணம் என்று ஏனைய தரப்புக்களின் மீது பழிசுமத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

பொருட்களின் விலைக்கொள்கைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து, பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மைக்காலத்தில் பொருட்களின் விலையேற்றம் முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கும் பின்னணியில், இதுகுறித்து கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

நாட்டில் சுகாதார நெருக்கடி நிலையொன்று காணப்படும் சூழ்நிலையில், சுகாதாரப்பணியாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்ட தீர்மானம் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை சுகாதாரப்பணியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டுவதற்கும் முன்வரவேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது, வர்த்தகர்கள் பொருட்களை சந்தைக்குக் கொண்டுவராமல் பதுக்கிவைப்பதே அதற்குக் காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

உணவுப்பொருட்கள் தொடர்பான ஆணையர், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இவற்றுக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஏனைய தரப்புக்கள் மீது பழிசுமத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கும் அவர், கொள்கைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து பிரச்சினைகளை உரியவாறு கையாளவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24