கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலம் ஒட்டுமொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் - ஹரினி அமரசூரிய

Published By: Digital Desk 3

09 Jul, 2021 | 09:36 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டமூலம் ஒட்டுமொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். இராணுவ கலாசாரத்துக்கும் உயர்கல்விக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அதனால் உயர்கல்வியில் இராணுவ கலாசாரத்தை புகுத்துவது மிகவும் ஆபத்தாகும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டமூலம் நாட்டில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த சட்டமூலம் தொடர்பில் எமக்கு எழுந்த சந்தேகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற செயற்குழுவுக்கு எமது பரிந்துரைகள் சிலவற்றை தெரிவித்தபோது அதற்கு எமக்கு கிடைத்த பதிலில், அந்த சந்தேகங்கள் உறுதியாகின.

விசேடமாக இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி அறவிடுவது, இந்த பல்கலைக்கழகம் திறைசேரிக்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக எனவும், அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்புடன் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் இவர்கள் உயர் கல்வியை நாட்டின் ஏனைய தென்னை. இறப்பர் துறைகளுக்கு சமப்படுத்தியே இருக்கின்றனர். ஏனைய துறைகளை விற்பனை செய்து சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை அவ்வாறு செய்யமுடியாது.

கல்வியை விற்று சம்மாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடாது. அதேபோன்று இராணுவ நிர்வாகம் அங்கு இடம்பெறுகின்றதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் தீர்மானம் எடுக்கும் 9 பேர் கொண்ட குழுவில் 5 பேர் கோரமாகும் அதில்  இரண்டுபேர் இராணுவ கொமாண்டர்களும் பல்கலைக்கழக பீடாதிபதியும் இருக்கவேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான தீர்மானங்களை இராணுவத்தின் மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்விக்கூடத்துக்குள் இராணுவத்தினரை தலையிடச்செய்வது எந்தளவு பாரதூமானது என்பது கல்வி அமைச்சருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் இவை எதனையும் தெரியாமலே இங்கு கதைத்தார்.

மேலும் இராணுவ கலாசாரத்த்துக்கும் உயர்கல்விக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. இராணுவ கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு திருமணம் முடிக்க முடியாது. கூட்டங்களை நடத்த முடியாது போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் எமது சாதாரண பல்கலைக்கழங்களில் அவ்வாறு இல்லை. மாணவர்களுக்கு பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர உரிமை இருக்கவேண்டும்.

கொத்தலாவலை பல்கலைக்கழகமாகும். அவ்வாறெனில் பல்ககலைக்கழகமொன்றின் நோக்கத்தை எவ்வாறு இதில் எதிர்பார்க்க முடியும்.  இராணுவ பயிற்சி அதுதொடர்பான கல்வி பயிலும் இடமாக இது இருந்தால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இது அவ்வாறு அல்ல. சாதாரண மாணவர்களும் படிக்கும் பல்கலைக்கழகம். இதில் இராணுவ சலாசாரத்தை ஏற்படுத்துவது எமது பாரிய பாதிப்பாகும் என்பதை அனைவரும் உண்ர்ந்து செயற்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38