சிவில் சமூகத்தை இராணுவ மயமாக்கலுக்குள்ளாக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது - கஜேந்திரகுமார் 

Published By: Digital Desk 4

09 Jul, 2021 | 06:01 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இராணுவ பல்கலைக்கழகங்களை உருவாக்குவதன் மூலமாக சாதாரண, இராணுவ கொள்கையை விரும்பாத மாணவர்களும் கண்டிப்பாக இராணுவ கொள்கைக்குள் ஈர்க்கப்பட்டு சிவில் சமூகத்தை இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமென எமது மக்களுக்கு நம்பிக்கை  இல்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk

சமூகத்தை சர்வாதிகார கொள்கைக்குள் கட்டுப்படுத்துவதன் மூலம் நேற்று தமிழர்களுக்கு நடந்த அழிவுகள், இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நாளை சிங்களவர்களுக்கு ஏற்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினர், 

அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழக சுயாதீன சிந்தனைகளை ஊக்குவிக்கும் இடமாக அமைய வேண்டும், அவ்வாறான சுதந்திரம் காணப்படும் இடமாக பல்கலைக்கழகம் இயங்க வேண்டும்.

அப்போதுதான் சமூக மாற்றமொன்று உருவாகும். இவ்வாறான சுயாதீன துறைக்குள் இராணுவத்தை இலக்குவைத்த கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவது அல்லது இராணுவ சிந்தனைக்கு அமைய உருவாக்கப்படும் வேளையில் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இராணுவம் சிந்திக்கும் விதமும் சிவில் சமூகம் சிந்திக்கும் விதமும் வேறுபட்டதாகும். சாதாரண பல்கலைக்கழகங்களில் இராணுவம் சார்ந்த கட்டமைப்பொன்று முன்னெடுக்கப்படாது.

இராணுவத்திற்கு என உருவாக்கப்படும் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நடத்தைகளை கொண்டிருக்கும். இராணுவ பல்கலைக்கழக கலாசாரம் ஏனைய சாதாரண பல்கலைக்கழகங்களில் இருக்காது. எனவே இராணுவ பல்கலைக்கழகம் என்பது விசேட துறைகளுக்காக உருவாக்கப்படும் விடயமாகும்.

கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதன் நோக்கமானது, சாதாரண, இராணுவ கொள்கையை விரும்பாத மாணவர்களும் கண்டிப்பாக இராணுவ கொள்கைக்குள் செல்ல வேண்டிவரும். இது இராணுவ மயமாக்கலேயாகும்.

இதற்கு வேறு வார்த்தைகளில் எதனையும் கூற முடித்து. சாதாரண பிரஜைகளும் இராணுவ சிந்தனைகளுக்குள் உள்ளீர்க்கப்பட்டு இராணுவ நோக்கத்தில் அவ்வாறான நிறுவனங்களில் கற்று சமூகத்திற்குள் வருவார்கள்.

இதனால் சர்வாதிகாரத்திற்கு கட்டுப்படும் சமூகமொன்று உருவாக்கப்படும். ஆகவே சிவில் கற்கைகளுக்குள் இராணுவ மயமாக்கல் இருக்கக்கூடாது. இன்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்களில் இராணுவ தலையீடுகள் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் நியமனங்கள் மூலமாக இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

இராணுவம் என்பது பலமான நிறுவனமாக இருக்க வேண்டும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த நிறுவனம் சமூகத்தில் பரவினால், சமூக சிந்தனை நீக்கப்பட்டு சிந்தனை அற்ற சமூகம் உருவாக்கும் நிலை உருவாகும்.

வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் விவாதத்தில் நான் இதனை கூறினேன், இராணுவ மயமாக்கல் மூலமாக நேற்று தமிழர்களுக்கு நடந்த அழிவுகள், இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நாளை சிங்களவர்களுக்கு ஏற்படும். யுத்தத்திற்கு பின்னர் எமது தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்.

ஏனைய மாகாணங்களை போன்று அவர்களுடன் போட்டியிட முடியாத நிலையே உள்ளது. அவ்வாறு போட்டியிட சென்று இறுதியாக கடன் நெருக்கடிகள் எமது மக்கள் தள்ளப்பட்டனர்.

வடக்கு கிழக்கு மக்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவம் மூலம் நடத்தப்பட்ட விவசாய நிலங்களில் பணியாற்ற நேர்ந்தது. இது சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31