இராணுவ அதிகாரியொருவர் ஜனாதிபதியாக இருப்பதில் தவறென்ன?: இராணுவமயம் என்று விமர்சிப்பதையும் கைவிட வேண்டும் - ரோஹித

Published By: J.G.Stephan

08 Jul, 2021 | 05:56 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் ஜனாதிபதி ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும், பாதுகாப்பு அமைச்சர்  ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும் என்ன தவறு உள்ளது? ஜனாதிபதியினால் மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில், இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில் இராணுவம் மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிப்பதை கைவிட வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி உருவாக்கிய அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோவை நியமித்தீர்கள், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கூறியது என்ன, தாக்குதல் நடத்தப்படும் என நினைத்தோம் ஆனால் இவ்வாறு தாக்குதல் இடம்பெறும் என நினைக்கவில்லை என்றார். இவ்வாறான ஆட்சியாளர்கள் வேண்டுமா, இந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருந்தால்  அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.பொருத்தமான நபர் இன்று ஆட்சியில் உள்ளார், அதுமட்டுமல்ல இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் ஒருவர் பிரதான ஆசனத்தில் அமர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் விமர்சித்து வருகின்றனர்.

நாட்டினை பாதுகாத்து, கொவிட் நிலைமைகளை சரியாக கட்டுப்படுத்தும் இராணுவத்தை இன்று விமர்சிக்கின்றனர். இன்று சவேந்திர சில்வாவை விமர்சிக்கும் நபர்கள் எவ்வாறு அன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுத்தீர்கள். இன்று நாடே கொவிட் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மக்கள் அனாதரவாகியுள்ள நிலையில்  சுகாதார துறையினர் போராட்டம் நடத்துகிறனர். எப்போதுமே இல்லாத அளவிற்கு நாட்டில் போராட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சிகளே இவை அனைத்தும். இதனால் பாதிக்கப்படுவது வேறு யாருமல்ல எமது அப்பாவி மக்களே. அதனை தவிர்க்க இராணுவத்தை பயன்படுத்தி கொவிட் தடுப்பு சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தது தவறா? உங்களில் ஒருவர் கொவிட் வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கமுடியாத நிலையில் இராணுவம் உதவி செய்வதை நீங்கள் மறுப்பீர்களா?

மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில் இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில் இராணுவம் மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிக்கிறனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33