இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இல்லை..!

Published By: J.G.Stephan

08 Jul, 2021 | 05:48 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று நிலைமையால் சுற்றுலா வியாபாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். புதிய வழிகாட்டலின் பிரகாரம்  இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை முழுமையாக திறப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுற்றுலாத்துறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் வலுவானதாக இருந்தது. அந்நிய வருவாய் அதிகமாக கிடைக்கும் ஒரு முறைமைதான் சுற்றுலாத் தொழில்துறை. 2009ஆம் ஆண்டின் பின்னர் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்முனைவோரால் வெற்றிகரமாக இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்தது. 90 சதவீதம் தொழில்முனைவோர்தான் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துகின்றனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெறும்வரை நாட்டின் சுற்றுலாத்துறையை கொண்டுச்சென்றது இவர்கள்தான். 

ஆகவே, இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதேபோன்று சுற்றுலாத்துறையில் அனுபவமிக்கவர்கள் வேறு தொழில்களை நோக்கி நகர்கின்றமையை அண்மைக்காலமாக காணமுடிகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக தொடர்ச்சியாக இவர்கள் மூன்று வருடங்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாது போனமையாலேயே வேறு தொழில்வாய்ப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. சுற்றுலாத்துறை தொழில் முனைவோரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் மற்றும் லீசிங்கை மீள செலுத்துவதற்கு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. கடந்த மாதம் 9ஆம் திகதி மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இவர்களுக்கான கடன் சலுகையை ஜூலை (இம்மாதம்) 31ஆம் திகதிவரை நீடிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் கொவிட் தொற்று பரவல் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சலுகைக்காலத்தை வழங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சலுகைக்காலத்தில்  வட்டி செலுத்துவதை இடைநிறுத்தவும் லீசிங்க செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையினருக்கு பாதிப்பின்றி இலங்கை மத்திய வங்கி உரிய தீர்மானங்களை எடுக்கும். இருந்தபோதும் சுற்றுலாத்துறையை நம்பி தொழில் செய்துவருபவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதாக இருந்தால், சுற்றுலாத்துறையை விரைவாக யதார்த்த நிலைக்கு கொண்டுவரவேண்டும். அதனை நாங்கள் விரைவாக மேற்கொள்வோம்.

அத்துடன் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கின்றன சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் இதனை விமர்சிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் கிராமங்களுக்கு வருகை தந்தால் அடித்து விரட்டுமாறு கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளால் கொவிட் தொற்று பரவியுள்ளதாகவும் கூறுகின்றனர். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் குழுக்களால் கொவிட் தொற்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவவில்லையென்பதை மிகவும்பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாளும் விசேட முறைமைகளை நாம் கையாளுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55