சீனா - இலங்கை நாணயம் 

Published By: Digital Desk 2

08 Jul, 2021 | 03:37 PM
image

குமார் சுகுணா

இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும் முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

 இந்த நிகழ்வு, நேற்றுமுன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ  கலையரங்கின் முன்பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்கு கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "இலங்கை - சீனா 65 ஆண்டுகள்" என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் "சீன கம்யூனிஸ்ட் கட்சி" என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 இலங்கை  மத்திய  வங்கி  ரூ. 1000  முகப்  பெறுமதியையுடைய தங்கம்  மற்றும்  வெள்ளி  ஒரே சித்தரிப்புகளுடனான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ளது.

இரு  நாடுகளுக்கும்  இடையிலான  நீண்டகால  நட்பு  மற்றும்  பரஸ்பர நம்பிக்கையைப்   பாராட்டும்   முகமாக   இலங்கை   அரசின்   வேண்டுகோளின்படி   நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.நாணயங்களின் விரிவான  விபரம்  மற்றும்  உற்பத்திக்  குறிப்பு  கீழே தரப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்பக்கத்தின்      மத்தியில் தாமரைத்தடாக மகிந்த ராஜபக் ஷ திரையரங்கின்  படம்  இலங்கை  மற்றும்  சீன தேசியக்  கொடியுடன்  சித்தரிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்கின்  கீழேநாணயத்தின்  வருடமான '2022'பெரிய இலக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. 'இலங்கை - சீனா  65 ஆண்டுகள்'என்ற   சொற்கள்   ஆங்கிலம், சிங்களம்   மற்றும்;  தமிழில்   நாணயத்தின் சுற்றுவட்டத்தில் (வலஞ்சுழியாக) காணப்படுகின்றன. குற்றியின்  பின்புறத்தில் 'சீன  பொதுவுடைமைக் கட்சி'என்ற சொற்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  காணப்படுவதுடன் '1000'என பெரிய  இலக்கங்களில்  முகப்புப்  பெறுமதியும் '1921 -2021'என்ற  வருடங்களும் 100என ஆண்டு நிறைவும் காணப்படுகின்றது. 'இலங்கை'என்ற சொல் ஆங்கிலம், சிங்களம் மற்றும்; தமிழில் குற்றியின்    மேல்    ஓரத்தின்    விளிம்பில் (வலஞ்சுழியாக) தோன்றுகின்றது.'ரூபா'என்ற சொல்  சிங்களம், தமிழ் மற்றும்  ஆங்கிலத்தில் குற்றியின் கீழ்;    ஓரத்தின்    விளிம்பில்தோன்றுகின்றது

தங்க நாணயத்தின் விபரங்களும் உற்பத்திக் குறிப்புக்களும்,

உலோகம்–தங்கம் (22கரட்)

வடிவம் – வட்டம்

குற்றியின்வகை – கறை படியாதது, ஓரம்வெட்டப்பட்டது

விட்டம்–25.4 மி.மீ.

நிறை– 12.0 கிராம்

வழங்கல்– 500 குற்றிகள்

ஓரு நாணயத்தின் விற்பனை விலை ரூ.222,000

வள்ளி நாணயத்தின் விபரங்களும் உற்பத்திக் குறிப்புக்களும்,

உலோகம்– வெள்ளி (0.925)

வடிவம்–    வட்டம்

குற்றியின் வகை – கறை படியாதது

ஓரம்– வெட்டப்பட்டது

விட்டம்– 38.61மி.மீ.

நிறை–28.28கிராம்

வழங்கல்– 2000 குற்றிகள்

ஓரு நாணயத்தின் விற்பனை விலைரூ. 17,000

முதலாவது குற்றி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷமன் அவர்கள் மூலம் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களுக்கு 06.07.2021அன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்நாணயக்குற்றி  உறுதிச்  சான்றிதழ்  ஒன்றுடன்  கவர்ச்சிகரமான  அன்பளிப்புப்  பெட்டியொன்றினுள் வழங்கப்படுகின்றது. இவ்வரையறுக்கப்பட்ட    தங்க    நாணய    வெளியீடானது நாணயத் திணைக்களத்தினூடான  முன்பதிவுகளுக்கு பொருளாதார  வரலாற்று  அரும்பொருட்காட்சிச்சாலை, சென்றல் பொயின்ட் கட்டடம், இல. 54 சதம் வீதி, கொழும்பு 01 என்ற முகவரியில் அமைந்துள்ள இலங்கை  மத்திய  வங்கியின்  விற்பனைக்  கருமபீடத்தினூடாக மட்டும்12.07.2021தொடக்கம் மேற்கூறப்பட்டுள்ள விலையில் விற்பனை செய்யப்படும். 

மேலும், வெள்ளி நாணயமானது மேற்கூறப்பட்ட விலையில் 12.07.2021 தொடக்கம் பொருளாதார  வரலாற்று  அரும்பொருட்காட்சிச்சாலையின் விற்பனைக் கருமபீடத்தினூடாக விற்பனை செய்யப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் வெவ்வேறு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குற்றிகள் அந்நாட்டின் வரலாற்றினைக் கற்கும்  பங்கினை ஆற்றுகின்றன. அளவில் சிறிதாக இருந்தபோதும் நாணயங்கள் அவை பயன்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாசார வரலாறு பற்றிய பெறுமதிமிக்க தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கிறது.

இலங்கை நீண்ட வரலாற்றையும் அதேபோன்று நீண்டதும் செல்வம் மிகுந்த பொருளாதார வரலாற்றையும் கொண்டதொரு நாடாகும். இன்று உலகம் முழுவதும் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும், இலங்கை அதன் நட்பு நாடாக தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது. 

இது இன்று, நேற்று உருவான உறவு அல்ல. பல்லாயிரம் வருடங்களாக நிலவி வருகின்ற உறவு. சீனா இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறது. அது இலங்கையின் முக்கிய பொருளாதார திட்டங்கள் பலவற்றுக்கு பெரிய அளவு பங்களிப்பைச் செய்திருக்கிறது.

 ஆனால் இந்த ஈடுபாட்டை ஏதோ சீனா இலங்கையில் அளவுக்கதிகமான செல்வாக்கு இருப்பதைப் போலக் காட்டி தவறாக சித்தரிக்கப்படுவதாக ஜனாதிபதி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். உள்நாட்டிலும் பல அரசியல் வாதிகள் சீனா இலங்கையில் அதிதாமாக தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சீனாவின் துறைமுக நகரம் திட்டம் கூட பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

ஆயினும் சீனாவுடன் இலங்கை அரசு தொடர்ந்து நட்புறவை பேணி வருகின்றது. மிக சிறந்த நட்பு நாடு என்பதற்கு இந்த நாணய வெளியீடு உதாரணமாகியுள்ளது. மேலும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி உலக நாடுகளை கடுமையாக எச்சரித்திருந்தார். சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் யாரேனும் நடந்தால் அவர்களது தலை நசுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து செய்தியில், சீனாவை சுதந்திர சீனாவாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது. குறிப்பாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1940 களில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவு கொண்டுள்ளது. 

சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மதிக்கும் மக்கள் இலங்கையில் வாழ்கின்றமையாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எங்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் இலங்கையில் சீனாவினை கெளரவிக்கும் வகையில் வெயிடப்பட்டுள்ள நாணயம் மிக முக்கியத்துவம் மிக்கதாக உலக அரசியலில் பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04