கேப்பாபிலவு குடியிருப்பு மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமம்: உடனடி தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை..!

Published By: J.G.Stephan

08 Jul, 2021 | 12:31 PM
image

முல்லைத்தீவு கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள்  தற்போதைய வரட்சியான காலநிலை காரனமாக  குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் தற்போது 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் 65 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது,  குறித்த கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகள், குழாய்க்கிணறுகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டன.

இதில் கூடுதலான கிணறுகள் நீரின்றி காணப்படுகின்றன. அதேவேளை குழாய்கிணறுகளும்  பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் தாங்கள் குடிநீர் மற்றும் ஏனைய தேவைக்கான நீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த குழாய் கிணறுகளை புனரமைத்து குடிநீர்க் கிணறுகளை துப்பரவு செய்து தருமாறு  தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குடிநீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரை பல தடவை தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38