இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர பங்களதேஷ் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

திலான் சமரவீர இங்கிலாந்து அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி விளையாடவுள்ள தொடருக்கு துடுப்பாட்ட ஆலேசகராக செயற்பட இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் திலான் சமரவீரவின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 

திலான் சமரவீர இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.