பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பஷில்

Published By: Vishnu

08 Jul, 2021 | 10:12 AM
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த  கெட்டகொட செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  இராஜினாமா செய்ததை  தொடர்ந்து ஏற்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு  பொதுஜன பெரமுனவின் தேசிய  அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள்  ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

இந் நிலையிலேயே அவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி முன்னிலையில் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00