அரசியல் செயற்பாடுகளை விடுத்து நாட்டு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 06:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கம் அரசியல்  செயற்பாடுகளை விடுத்து நாட்டு மக்களுக்க நிவாரணம் வழங்குவது தொடர்பில்  அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற  பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார். என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள்  ஊடகங்களில் குறிப்பிட்டார்கள். இதனை பேச்சளவில் மாத்திரம் குறிப்பிடாமல்  செயலளவில் செயற்படுத்த வேண்டும். என  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், எதிர்வரும் காலங்களில் இடம் பெறவுள்ள தேர்தல்களில்கட்சி என்ற ரீதியில் போட்டியிடல், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணிகள் குறித்து  மத்திய செயற்குழு கூட்டத்தில்  ஆராயப்படவுள்ளது.

 அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பங்காளி கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் புறக்கணிப்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பங்காளி கட்சிகளை  புறக்கணித்து  கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட  முடியாது.

 நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து  அரசாங்கம் கவனம் செலுத்துவதை விடுத்து அரசியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பொருளாதார ரீதியில் மக்கள்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முறையான திட்டங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22