முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்களின் போது, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்பட க்கூடாது

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 05:41 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாற்றமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது. அத்துடன்  பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் கடுமையாக செயற்படுத்தி சிறுபான்மை மக்களின் மத மற்றும் அரசியல் உரிமைகளை இல்லாமலாக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக அவதானித்து வருகின்றது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை எமக்கு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் இல்லாமல்போனால் அது எமது பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். அது செய்யப்படவேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவில்லாமல் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கின்றது. மக்கள் காங்கரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவர் பல மாதங்களாக எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார். அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகள் பலர்   பல வருடங்களாக சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அரசாங்கம் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் கலந்துரையாடியபோது எமது கருத்துக்களை கருத்திற்கொள்வதாக தெரிவித்தார். அதனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாற்றமாக மேற்கொள்ளக்கூடாது. அதேபோன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாகவும் திருத்தங்களை மேற்கொள்ளும்போது முஸ்லிம் அறிஞர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02