கோடிகளை தொட்ட முதல் தமிழர் 

Published By: Digital Desk 2

07 Jul, 2021 | 04:27 PM
image

குமார் சுகுணா

ஒரு பேரிடர் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் நடிகர்கள் நிவாரண நிதிகளை வழங்குவதனை பார்திருக்கின்றோம். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் நிவாரண நிதி என்றால் 5 –10 இலட்சம் தான் வழங்குவர்.   

அதிகமானால் ஒரு சிலர் மாத்திரம் 25– 50 இலட்சம் வழங்குவர். ஆனால் சாதாரணமாக யூடியூப்பில் சமையல் காணொளிகளை  வெளியிட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் நன்கொடை, வழங்கியுள்ளார்கள் எனும் போது எல்லோரின் பார்வையும் அவர்களின் பக்கம் திரும்பத்தான் செய்யும்.

முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் நன்கொடை, 1 கோடிக்கும் மேலான சப்ஸ்கிரைபர்களுடன்,தமிழில் முதல்  முதல் வைர பட்டன் பெறும் யூடியூப் என கலக்கும் வில்லேஜ் குக்கிங் எனும் யூ-டியூப் சேனல் மீது இன்று அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

ஒரு காலத்தில் இங்கிருந்து குரல் வழியாக பூமியின் வேறு மூலையில் உள்ள ஒருவருடன் ஒரு கருவி மூலம் பேசலாம் என்பதனை அறிந்த போது தொலைபேசியையே அதிசயித்து பார்த்தார்கள். ஆனால் இன்று குழந்தையாக வளரும் போதே பிள்ளைகள் செல்போனோடு வளர்கின்றனர். 

அது மட்டும் அல்ல  இன்று சமூகவலைத்தளங்கள் என்பது சோறு போல அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. இதற்கு காரணம் 21-ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றமையே ஆகும்.

தொழில் நுட்ப வளர்ச்சி என்பது 2 ஆயிரத்தின் பின், ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு ரொக்கெட் வேகம் பிடித்தது. குறைந்த விலையில் டேட்டா கிடைக்கத் தொடங்கியது. இணையம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நல்ல அளவில் உயர்ந்தது. இதில், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் நல்ல வளர்ச்சியைக் கண்டன. முக்கியமாக, இலவசமாகக் கிடைக்கும் யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்கள், மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த யூடியூப் சேவை, 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீடியோக்கள் பகிரும் தளமாகும்.

2018ஆம்  ஆண்டில் கூகுளுக்கு அடுத்து மிகவும் பிரபலமான இணையதளமாக இருப்பது யூடியூப்தான். இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, ஒரு நிமிடத்திற்கு 500 வீடியோக்கள் என்ற அளவில் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன. இதனால் வீடியோ உருவாக்கி பலரும் யூடியூபில் வருவாயும் ஈட்டத் தொடங்கிவிட்டனர். இதில் நம்மை போன்ற சாதாரணவர்களும் யூடியூப் மூலமாக பணக்காரர்களாவதை நாமும் பார்க்கின்றோம். இதனால் பலரும் யூடியூப்பை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

யார் வேண்டுமானாலும் யூ-டியூப்பில் சேனல் ஆரம்பிக்கலாம். ஆனால் அதில் வெற்றி பெறுவதற்கு, புதுமையும், கடின உழைப்பும் கட்டாயம் தேவை. குறிப்பாக கொரோனா லொக்டவுனில் பிரபலங்கள், சாதாரண நபர்கள் என பெரும்பாலானோரின் கவனம் யூ-டியூப் பக்கம் திரும்பியது. இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் உள்ள சேனல்தான் வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel).

மொத்தம் 5 பேர் கொண்ட இந்த சேனல், தமிழர்களிடத்தில் மிகவும் பிரபலம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரோடு  இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் ராகுல் காந்தி. அதிலிருந்து இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel) மாறியது.

ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், இவர்களுடைய கிராமத்துப் பேச்சு முறை  மக்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைக் கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 10 இலட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக இவர்கள் அளித்துள்ளனர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் பலரும் இந்த யூடியூப் சேனலுக்கு பாராட்டு தெரிவிக்க, ட்விட்டர் தளத்தில் #VillageCookingChannel என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்டானது.

 மேலும், தங்களுடைய வளர்ச்சி எப்படித் தொடங்கி தற்போது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதையும் வீடியோவாகப் பேசி வெளியிட்டுள்ளனர். அதைப் பலரும் பகிர்ந்து இந்த யூடியூப் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், அத்தோடு தமிழில் முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டனர். இன்று பணத்துக்காக  சிலர் தங்களது யூடியூப்பை ஆபாச பேச்சுகள் நிறைந்த தளங்களாக மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு மாறாக யூடியூப்பை நல்ல விதமாக பயன்படுத்தி நன்மை அடையலாம். நாமும் நன்மையடைந்து மற்றவர்களுக்கும் நன்மை செய்யலாம் என்பதற்கு இந்த வில்லேஜ் குக்கிங் உதாரணமாகியுள்ளது. 

நாமும் இவர்களை பாராட்டுவோம். சாதாரண கிராமத்தில் இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இன்று மொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் இவர்களது வளர்ச்சி உள்ளது என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. வாழ்த்துவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54