1000 ரூபா படுத்தும் பாடு 

Published By: Digital Desk 2

07 Jul, 2021 | 04:05 PM
image

குமார் சுகுணா

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும்  உள்ள  உரிமையாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த உரிமை எல்லா மக்களையும் சென்றடைவதில்லை. அது எல்லோருக்கும் கிடைப்பதுமில்லை. 

ஆளும் வர்க்கத்தினால் அல்லது வசதியுள்ள வர்க்கத்தினால் சாதாரண மக்கள் காலங்காலமாக சுரண்டப்படுகின்ற நிலைமையும் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிப்பதும் இயல்பே. உலகில் இது போன்ற சுரண்டல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் வெடித்திருக்கின்றன என்பது வரலாறு.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்தாலும் இன்னும் அந்நியர்கள் போலவே நடத்தப்படுகின்ற ஒரு சமூகம் மலையக சமூகம் என்ற குறைப்பாடு பல காலமாக உள்ளது. அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லை என்று முன்னைய அரசுகளினால் நாடு கடத்தப்பட்ட துயர்மிகு வரலாறுகளை மறக்க முடியாது. 

உறவுகள் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் எஞ்சிய மக்கள்  இந்த நாட்டில் வேர்பிடித்து துயரத்துடனையே வாழத்தொடங்கினர். அரச நிர்வாகத்துக்கு பதிலாக தோட்ட கம்பனிகளின் நிர்வாகத்துக்கு கீழேயே இன்றும் வாழ்கின்றனர். அங்கு தோட்ட நிர்வாகம்தான் அனைத்தும். அரசாங்கம் கண்டுக்கொள்வதில்லை. அவர்களது வாக்குகளால் சுகபோகங்களை அனுபவிப்பவர்களும் இவர்களை கண்டுக்கொள்வதில்லை. அதனால்தான் மலையகம் தொடர்பான  தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டுக்கு  வெள்ளைகாரர்களின் அடிமைகளாக கூலி வேலைக்கு வந்த பரம்பரையினர் என்றாலும் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பு இந்த மக்கள் தான். உலகளவில் தேயிலைக்கு என்று தனி கேள்வி உள்ளது. சீனா, இந்தியா தொட்டு பல நாடுகளிலும்  நாட்டின் பொருளாதார தூண்களாக தேயிலை பல நாடுகளில் உண்டு. இலங்கைக்கும் அப்படித்தான். 

இந்த நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி சுமப்பதாக தேயிலைத்துறைதான் இருக்கின்றது. சுதந்திரத்துக்கு பின்பு இருந்து இன்று வரை இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தருகின்ற முக்கிய துறை. ஆனால் அந்த துறையின் வளர்ச்சிக்கு அரசோ அல்லது அதனை நிர்வகிக்கின்ற கம்பனிகளோ உரிய நடைமுறைகளை செய்வதில்லை. இதனால்தான் இன்று பல தேயிலை தோட்டங்கள் காடுகளாக்கபட்டு விட்டன. குளவிகள் தொட்டு  சிறுத்தைகள் வரை  பல வனவிலங்குகளின்  தாக்குதல்களுக்கு மக்கள் தேயிலை பறிக்கும் போது இலக்காகிக்கொண்டிருக்கின்றனர்.

 இந்நிலையில் கொரோனா என்ற ஆட்கொல்லி உலகளவில் பரவி உயிர்களை காவிக்கொண்டிருக்கின்றது. எல்லாத் தொழில் செய்பவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சில தளர்வுகளின் போது மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். ஆனால் இந்த கொரோனாவையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வேலைக்கு சென்று இந்த நாட்டின் வருமானத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பது மலையக தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமே. 

அவர்களை யாரும் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. வாக்குகளை வாங்கும் அரசியல் வாதிகள் திடீர் பணக்காரர்களாகி உலகம் சுற்றி சலிப்பதை பார்க்கின்றோம். ஆனால் மக்கள் அதே நிலையில் தான் மாற்றம் இன்றி இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது நாட்சம்பளம் இவர்களது வாழ்க்கையை நடத்துவதற்கு போதாது. உழைப்பதற்கு மிக குறுகிய அளிவிலேயே ஊதியம் கிடைக்கின்றது என்ற குரல் காலங்காலமாக ஒலிக்கின்றது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்த குரல் சற்று பலமாக ஒலித்தது. விலை வாசி ஏற்றத்துக்கு இவர்களின் வருமானம் போதாது என்பதால் சம்பள உயர்வுகளை வேண்டிய போராட்டம்.ஆனால் அந்த போராட்டத்துக்கு தீர்வு கிடைக்க ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்து. அமரர் ஆறுமுகம் தொண்டமான் காலத்தில் 1000 பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் இறுதி வரை பெறாமல் இருந்தது. அவர் எத்தனை முயற்சித்தும் இறுதியில் அவரது  எதிர்பாராத மரணத்தோடு ஆயிரமும் மடிந்ததாகவே பலரும் நினைத்தனர். ஆனால் அவருக்கு பின்னர் அவரது மகன் ஜீவன் ஆயிரம் ரூபாவை தனது வாக்குறுதியாக அளித்தார். பல கட்ட போராட்டங்களின் பின்னர் அதனை நிறைவேற்றிக்கொடுத்ததார். ஆயிரம் கிடைதில் மகிழ்ச்சி என்றாலும் அது காலம் தாழ்ந்து கிடைத்தது என்பதே உண்மை.

இந்நிலையில், 1000 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல், மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் நிபந்தனைகளை விதிப்பதாக மலையகம் முழுவதுமே மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் 18 கிலோவுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்தவர்கள் இன்று ஒரு நாளைக்கு 26 கிலோ எடுத்தால்தான் பேரு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாள், 20 கிலோ எடுத்தால்தான் பேரு என்றால்,  அதில் காலை ,பகல், மதியம் என மூன்று நேரமும் இரண்டு கிலோ வீதம் கொமிசனும் எடுத்துக்கொள்கின்றனர். 

ஒருவர் எத்தனை  கிலோ கொழுந்து எடுத்தால் அதில் ஆறுகிலோ கழிக்கப்படும்.  இதனால் ஒரு நாளைக்கு 20 கிலோ எடுத்தாலும் அதில் ஆறு கிலோ கழிபட்டு பதினான்கு கிலோவாக மாறும். இது அவருக்கு அரைபேரையே பெற்றுக்கொடுக்கும். அவர்கள் பதினாறு கிலோ எடுத்தால் அந்த இரண்டு கிலோவுக்கு 40 ரூபா , 50 ரூபாய் என்று  கொடுப்பார்கள். முழு சம்பளத்தை அவர் பெற வேண்டுமாயின்,  மேலும் ஆறு கிலோ அதிகம் எடுக்க வேண்டும். ஆக குறைந்தது 20 கிலோவுக்கு ஒருநாள் பேரு கொடுத்தால் அதனுடன்  மேலதிகமாக கொமிசன் ஆறு கிலோ எடுக்க வேண்டியுள்ளது.   இது எவ்வளவு பெரிய சுரண்டல். இதற்கு பல தோட்டங்களில் முன்கள பணிப்புரியும் தோட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என்பது வேதனை. மக்கள் என்பது ஆடு,  மாடுகளாகவோ, பொதி சுமக்கும் கழுதைகளாகவோ இருக்க முடியாது. அவர்கள் உணர்வுகளை கொண்ட உயிர் என்று யாரும் உணர்வதில்லை. இதனாலேயே உலகத்தில் சுரண்டலுக்கு எதிரான பல போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

அந்தவகையில், தற்போது கொட்டியாகலை கீழ் பிரிவு தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒன்றே. ஆனால் இது அந்த குறிப்பிட்ட தோட்டத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. மொத்த மலையக மக்களையும் பாதித்துக்கொண்டிருக்கின்ற விடயம்.

சம்பள நிர்ணய சபையினால் 1,000 ரூபாய் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கொட்டியாகலை தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 18 கிலோ கிராம் பச்சை தேயிலை பறிக்க வேண்டும் என கடந்த மூன்று மாத காலமாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 13 கிலோ பச்சை கொழுந்தே பறித்தோம் அதற்கு மேலதிகமாக பறிக்கும் பச்சைக் கொழுந்து ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வந்தது. எங்களது தொழிற்சங்கம் அறிவித்தமைக்கு அமைய மேலதிகமாக 02 கிலோவுடன் 15 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியும்.

18 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியாதென தெரிவித்தே உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு ஆயிரம் ரூபாவை கொடுத்துவிட்டு அதன் மூலம் எவ்வளவு உறிய முடியுமோ அவ்வளவு உழைப்பை உறிவது எத்தனை பெரிய கொடுமை. அதுவும் கொழுந்து இருக்கும் காலத்தில்20 கிலோ,30 கிலோவாக மாறலாம். அதனை பறிப்பவர்களும் உள்ளனர். ஆனால் மழை இன்றி வெயில் மற்றும் பனி பொழிவுகள் நிறைந்த காலப்பகுதியிலும் அதே முப்பது கிலோ எடுக்க வேண்டும் என்று வலுகட்டையாகமாக துன்புறுத்துவது எத்தனை கொடுமை. இதற்கு எதிராக சரியான குரல் கொடுக்கவும் யாரும் இல்லை. அப்டியே குரல் கொடுத்தால். அது ஒடுக்குமுறைகளால் அடக்கப்படுகிறது என்பதே உண்மை.  தங்களது அரசில் இலாபத்துக்காக சில அரசியல் வாதிகள்  இதற்காக அறிக்கை விடவும் செய்கின்றனர்.ஆனால் அவர்கள் ஆட்சி வந்த போதும் இந்த நிலைதான்.

 அட்டை கடியில் இரத்தம் கொடுத்து உழைப்பவர்களை  அட்டையை விட அதிகமாக இன்று தோட்ட நிர்வாகங்கள் உறிஞ்சுகின்றன. என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21