வலயன்மடம் பகுதியில் 15 கிலோகிராம் கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் மூவரை கடற்படையினர்  நேற்று (01) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து  படகு, 2 டைவிங் துடுப்புகள், 10 ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றம் ஜி.பி.எஸ். கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மூவர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பவற்றை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.