தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பால் மாவின் விலை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நுவரெலியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 வரவு செலவுத் திட்டத்தில் பால் மாவின் விலைக்குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நிறுத்தும்படியும் உள்ளூர் பால் மாவிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமெனவும் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமெனக்கூறியும் நுவரெலியா நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நுவரெலியா  தலவாக்கலை, ஹட்டன், கினிகத்தேன உட்பட பல இடங்களிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.