அம்பாறை – தமன பிரதேசத்தின் மலையடி வாவியில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணமானவர் ஹிங்குரான, சீனி தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபர் என தெரியவந்துள்ளது.  

இச் சம்பவம் நேற்று மாலை  இடம்பெற்றுள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக தமன வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.