பி.சி.ஆர்.பரிசோதனைகள், தொற்றாளர்களின் தரவுகளை சேகரிப்பதில் சிக்கல் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

06 Jul, 2021 | 09:27 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் , நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் சங்கம் , இடைநிலை சுகாதார சேவைக்குரிய தொழிற்சங்கங்கள் , துணை சுகாதார ஊழியர் சங்கம் , ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் , சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கள் நேற்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலுமுள்ள பொது வைத்தியசாலையில் வெளிக்கள நோயாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்

அத்தோடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 9000 பி.சி.ஆர். பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினரின் வேலை நிறுத்தமும் இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளமையில் தாக்கம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அது மாத்திரமின்றி பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகளை ஆய்வு கூடங்களில் ஒப்படைத்தல், முடிவுகளைப் பெற்றுக் கொள்ளல், தொற்றாளர்கள் இனங்காணப்படும் தரவுகளை சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் சுகாதார தரப்பினரின் வேலை நிறுத்தம் காரணமாக மந்தமடைந்ததாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு இரு முறை சிந்திக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்னசிங்கம் தெரிவிக்கையில் ,

ஒரு பிரிவினருக்கு மாத்திரம் கட்டமைப்பையும் விதிமுறைகளையும் மீறி சலுகைகளை வழங்குவதானது சகல சுகாதார தரப்பையும் பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே ஏனைய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளையும் உடனடியாக ஆராய்ந்து தீர்வை வழங்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் அரச மருத்துவ அதிகாரிகள சங்கமும் தொழிற்சங்க போராட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் சரவணபவன் தெரிவிக்கையில் ,

எமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவை தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்குவதாகக் கூறினார். எவ்வாறிருப்பினும் இன்றைய தினமும் (செவ்வாய்கிழமை) ஏற்கனவே அறிவித்ததைப் போன்று சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவே தீர்மானித்துள்ளோம். 3 நாட்களுக்கு மேலதிகமாக சுகயீன விடுமுறை அறிவிப்பதாயின் மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு ஏனைய தொழிற்சங்கங்கள்

சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில் ,

நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பாரபட்சம் காட்டுவதன் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். எம்முடன் இடைநிலை சுகாதார சேவைக்குரிய 10 தொழிற்சங்கங்களும் தங்களுடன் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியால் தீர்வு வழங்கப்பட்டதை போல, எமது கோரிக்கைக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44