சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய  தேவை கிடையாது - கப்ரால்

Published By: Digital Desk 4

05 Jul, 2021 | 10:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்களை காலதாமதமின்றி உரிய காலத்தில் செலுத்த முடியும்.

பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய  தேவை கிடையாது.

இரு மாத காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பும் என  நிதி முலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர்  அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை விட தற்போது கடன் மிக வேகமாக அதிகரித்துள்ளது : அஜித்  நிவாட் கப்ரால் | Virakesari.lk

 நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர் தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது.

 முதல் காலாண்டு வரையான  காலப்பகுதியில்  நாட்டின் ஏற்றுமதி வருமானம்  32.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2020 ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதிக்குள் காணப்பட்ட சேவை ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் குறித்த காலப்பகுதிக்குள் 27.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.எனவே இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 31 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

 நெருக்கடியான சூழ்நிலையில்  பொருளாதரத்தை நிலையான தன்மையில் பேணுவதற்கு அரசாங்கம் பல்வேறு  சேவை துறைகள் ஊடாக  திட்டங்களை வகுத்துள்ளது.

2021 ஆண்டு இறுதி காலாண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 முதல் 5.5 சதவீதத்தால் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

 இலங்கை பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்களை செலுத்துவதில் நெருக்கடி நிலை ஏற்படும் என எதிர் தரப்பினர் குறிப்பிடும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

2019 ஆம் ஆண்டு  இறுதிகாலாண்டில் இருந்து  தற்போது வரையில் அரச முறை கடன்கள்  உரிய காலததில் செலுத்தப்பட்டுள்ளன.  அரச முறை கடன்களை செலுத்துவதில் எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது.

 பொருளாதார நெருக்கடியை  சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர் தரப்பினரும், முன்னாள் பிரதமர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது. 

சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார   நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள்  தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல  தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

 பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய  உள்ளக மட்டத்தில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள. அந்நிய செலாவணியை ஊக்குவித்தல்,ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை  கட்டுப்படுத்தல், இறக்குமதிகளை மட்டுப்படத்தல்,  ஏற்றுமதியை அதிகரித்தல். அரச பொது  சேவைகளை மேம்படுத்தல்,   என பல்வேறு தரத்திலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

 ஜி. எஸ். பி   பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தற்போது குறிப்பிடப்படுகிறது. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே ஜி. எஸ். பி  பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு: இலங்கைக்கு முதன் முதலாக ஜி.எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு  அந்த வரிவச்சலுகை  இடை நிறுத்தப்பட்டது. அப்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்க 27 நிபந்தனைககளை விதித்தது. அப்போதைய அரசாங்கம் அந்த நிபந்தனைகளுக்கு மறுப்பு தெரிவித்தால்  வரிச்சலுகை  இடைநிறுத்தப்பட்டது.

 2017 ஆம் ஆண்டு இலங்கைக்க ஜி. எஸ் பி பிளஸ் வரிச்சலுகை இடை நிறுத்தப்பட்டது.  வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் சுயாதீனத்தன்மையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் விட்டுக் கொடுத்தது. தற்போது மீண்டும் வரிச்சலுகை  இடை நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. 

ஜி.எஸ். பி பிளஸ் வரிச்சலுகை இடை நிறுத்தப்பட்ட காலத்தில் நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19