நிதியை திரட்டிக்கொள்ள அரசாங்கம் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது - ஐ.தே.க.

Published By: Digital Desk 4

05 Jul, 2021 | 09:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை கொண்டுசெல்ல தேவையான நிதியை திரட்டிக்கொள்ள அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

அதனால் தான் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. அத்துடன் அரசாங்கத்திடம் அந்நிய செலாவணி இல்லாமையே ரசாயன உரம் இறக்குமதிக்கான தடையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருதது தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டு வங்களை விற்பனை செய்வதாகவும் தங்களுடைய ஆட்சியில் நாட்டு வளங்கள் எதனையும் விற்கப்போவதில்லை என்ற வாக்குறுதியிலேயே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே, 2015க்கு முன்னர் அவர்கள் மேற்கொண்டுவந்த விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள்.

2015க்கு முன்னர் இவர்கள் காலிமுகத்திடலை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கியிருந்தார்கள். ஆனால் கடந்த எமது அரசாங்கத்திலேயே அதன் உரிமைத்துவத்தை இலங்கைக்கு பெற்றுக்கொண்டு 99 வருட குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் அரசாங்கம் தற்போது கெரவலப்பிட்டி வெஸ் கொஸ்ட் வலுசக்தி உற்பத்தி நிலையத்தின் 51வீத பங்குரிமையை அமெரிக்காவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுவருவதாக தெரியவருகின்றது.

இந்த நிலையத்தின் 51 வீத பங்கு அரசாங்கத்துக்குரியது. 27வீத பங்கு  ஈ.பி.எப். க்கும் 18 வீதம் லெகோ நிறுவனத்துக்கும் எஞ்சியது எல்.ரி.எல். க்கும் உரித்தாகும். அதன் பிரகாரம் இந்த நிலையத்தின் லாபம் பிரிந்து செல்கின்றதா என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும்.

மேலும் 2015/ 2019 காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எமது வலுசக்தி உற்பத்தியை (எல்.என்.ஜி) இயற்கை திறவ எரிவாயு ஆக மாற்றியமைக்க தீர்மானித்திருந்தோம்.

இரண்டு எல்.என்.ஜி நிலையங்களை அமைப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் முற்தரப்பு ஒப்பந்தங்கள் இரண்டுக்கு வந்து, நாங்கள் ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்டோம். அதேபோன்று தென் மாகாணத்தில் எல்.என்.ஜி. மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீன அரசாங்கத்துடன் நடவடிக்கை எடுத்தோம்.

இந்த விடயங்கள் எதனையும் கண்டுகொள்ளாமலேயே அரசாங்கம் கெரவலப்பிட்டி வெஸ் கொஸ்ட் வலுசக்தி உற்பத்தி நிலையத்தின் 51வீத பங்கை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

மேலும் அரசாங்கம் இவ்வாறு நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானங்கள் மூலம்  அரசாங்கத்திடம் பணம் இல்லை என்ற அடையாளம் தெளிவாக தெரிகின்றது.

அதேபோன்று தற்போது நாட்டில் உரம் இல்லாமல் விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் ரசாயன உரம் இறக்குமதி செய்வததை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் உலகில் காபநெய்ட் உரத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்படுவது 1.5வீதமாகும். அதனால் எமது நாட்டில் முற்றாக காபநெய்ட் உரத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்வதாக இருந்தால், பல வருடகாலங்கள் தேவைப்படும்.

என்றாலும் அரசாங்கம் ரசாயன உரம் இறக்குமதி செய்வதை தடைசெய்திருப்பதற்கு தெரிவிக்கும் காரணம் அதுவல்ல. ரசாயன உரம் இறக்குமதிசெய்ய அரசாங்கத்திடம் அன்னிய செலாவணி இல்லை. அதனாலேயே காபநெய்ட் உரம் உற்பத்தி செய்வதென்ற பொய் பிரசாரத்தை மேற்கொண்டு செல்கின்றது. 

எனவ எமது ஆட்சிக்காலத்தில் நாங்கள் மேற்கொண்டுவந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொய் விமர்சனங்களை செய்து மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனால் பொய்சொல்லி பெற்றுக்கொள்ளும் ஆட்சியொன்றின் இறுதி பெறுபேறு இவ்வாறுதான் இருக்கும் என்பதை மக்கள் தெரிந்துகாெள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02