பரஸ்பர நன்மைக்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார் - வெளியுறவு அமைச்சர்

Published By: Vishnu

05 Jul, 2021 | 11:49 AM
image

இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் பரஸ்பர நலன்களை முன்னேற்றுவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.

1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. 

எங்கள் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆழ்ந்த பாராட்டுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி, தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அளவுகள் நன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தினேஷ் குணவர்த்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

இக் கடித்தில் வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவின் புனித சந்தர்ப்பத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04