கொரோனா வைரஸின் தோற்றத்திற்கான வேட்டையில் நாம் எங்கே.?

Published By: J.G.Stephan

05 Jul, 2021 | 10:19 AM
image

கொரோனா வைரஸ்ஸின் தோற்றம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில்  சீனா போதுமான தகவல்களை பகிர்வதிலிருந்து விலகியுள்ளது. இந்த நிலை சீனா மீதான விமர்சனங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் எவ்வாறு நகரும் என்பது குறித்து கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொற்று நோய்களின் தோற்றம் குறித்து உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட சிறு காலப்பகுதிக்குள் நேச்சர்ஸ் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் சஞ்சிகை  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  சீன சந்தைகளில் வைரஸ் பரவக்கூடிய  வனவிலங்குகள் விற்பனை செய்யப்படுவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த ஆய்வறிக்கையின் பிரகாரம் 2017 மே மாதம் முதல் 2019 நவம்பர் மாதம் வரையில் வுஹானில் உள்ள சந்தைகளில் 38 வகை விலங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக  வெளவால்கள் , ரக்கூன் நாய்கள், சைபீரிய வீசல்கள், பன்றிகள் மற்றும் சீன மூங்கில் எலிகள் போன்றவை இந்த 38 விலங்கினங்களில் உள்ளடங்குகின்றன.  

வுஹான் சந்தைகளில் விற்கப்பட்ட விலங்குகள் பரவலாகவே வைரஸ் தொற்று உயிரியல் நோய்கள் அல்லது நோய்களைத் தூண்டும் ஒட்டுண்ணிகளை கொண்டவை என்று மேற்குறிப்பிட்ட ஆயவறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு தலைமையிலான குழு எட்டிய முடிவுகளுடன் குறித்த ஆய்வு அறிக்கையும் ஒத்திசைந்துள்ளது.  சார்ஸ்- சி.ஓ.வி -2 வைரஸ் விலங்குகளிடமிருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவியது. இதனடிப்படையில் நேரடியாக ஒரு வெளவாலிருந்து அல்லது மற்றொரு பாலூட்டி வழியாக ஹுவான் சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என்பதே எதிர்கூறல்களாகும்.  

இவ்வாறான ஆய்வு அறிக்கைகளை சீனா தொடர்ந்தும் முழுமையாக மறுத்து வருகின்றது. ஆனால் கொவிட் -19 தோன்றுவதற்கு முந்தைய ஆண்டுகளில் காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக அல்லது உணவுக்காக  வுஹான் முழுவதும் விற்கும் வழக்கம் காணப்பட்டதாக ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வுஹானில் விற்பனைக்கு வரும் காட்டு விலங்குகள் மோசமான  சுகாதார நிலைமைகளை தோற்றுவிக்க கூடியவையாகும். மேலும் அவை பிற மரபணுக்களை தோற்றுவித்து நோய்த்தொற்றுகளை உருவாக்கலாம் என வுஹானில் உள்ள ஹூபே சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின் விலங்கு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சியாவோ என்ற ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று காடுகளில் வாழ்பனவும்  வளர்க்கப்படாத  பல்வகை விலங்கு இனங்கள்  17 விற்பனையாளர்களால் விற்கப்பட்டதாக  அவர் தனது அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விற்பனையாளர்கள் எவருக்கும் அனுமதிகள் வழங்கப்படாத நிலையில் சட்டவிரோதமான விற்பனையாகவே அமைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஹூவான் சந்தையில் விற்கப்படும் அனைத்து நேரடி மற்றும் உறைந்த விலங்குகள் இனப்பெருக்கம் செய்ய அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற பண்ணைகளிலிருந்து வாங்கப்பட்டதாக வுஹான்  அதிகாரிகள்  கூறியதாக  உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆராய்ச்சி குழு அறிக்கை  வெளியிட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் நேரடி பாலூட்டிகள் விற்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட  அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 2020 ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு ஹு வான் சந்தை மூடப்படுகின்றது. இது குறித்து வெளியான  தகவல்களின்  அடிப்படையில் பல மூடிமறைப்புகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளனர். கொவிட் -19 இன் தோற்றத்தை வெளவால்களில் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து வைரஸ் குறித்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி இதன் சாத்தியப்பாடு குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் வெளவால்கள் பற்றிய ஆராய்ச்சியைக் கொண்ட வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜின் தரவுத்தளம் அழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழிக்கப்படா விட்டால் மற்றொரு பாதுகாப்பான இராணுவ கட்டமைப்பிற்குள்  மாற்றப்பட்டிருக்கலாம் என்பதே வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உடனான இராணுவ இணைய இணைப்புகளை கவனத்தில் கொள்ளும் போது வெளிப்படுகின்றது.

ஒரு இடைநிலை விலங்கிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், ஆய்வகத்தின் கசிவுகளின் அடிப்படையில் கூடிய கவனம் செலுத்தி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மிக சமீபத்தில் தென்மேற்கு சீனாவின் மோஜியாங்கில் உள்ள ஒரு செப்பு சுரங்கத்தில் தொழிலாளர்கள் வெளவால்களின் கழிவுகளை  சுத்தம் செய்த போது திடீரென நோய்வாய்ப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது குன்மிங் மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர். குறித்த சுரங்கமானது தென்மேற்கு சீனாவின் மொஜியாங் பகுதி வுஹானிலிருந்து 932 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தான் முதலில் கொவிட்-19 வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. எவ்வாறாயினும் உயிரிழந்த தொழிலாளர்களின் ஆய்வு மாதிரிகள் கொவிட் வைரசுகளுடன் பொறுந்தியமை  கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் சீனா இதனை முழுமையாகவே மறுத்து விட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிமோனியா போன்ற அறிகுறிகள் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்டதாக ஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி  ஆய்வாளர் ஷி ஜெங்லியும் அவரது குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போன்று 2020 நவம்பர் மாதம்  நான்கு நோயாளிகளிடமிருந்து 13 மாதிரிகளை மீண்டும் பரிசோதித்தது  அவர்கள் சார்ஸ்- சி.ஓ.வி -2 நோயால் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறானதொரு சூழலில் கொவிட்-19 வைரஸின் தோற்றம் மற்றும் அதன் பரவலுக்கான வழிமுறைகள் ஆகியவற்றை வழிநடத்தும் திறந்த களத்தில் நிறைய அறிவியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை வெளிப்படுகின்றது. மறுப்புறம் பரிமாற்றத்தின் மூலமும் பொறிமுறையும் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் சீனாவை நோக்கியே செல்கின்றன. இந்த ஆய்வறிக்கைளிலிருந்து எடுக்கப்பட வேண்டிய அடிப்படை முடிவும் அதுதான்.

ஹுவான் கடல் உணவு சந்தையில் காட்டு விலங்கு விற்பனை குறித்து 2021 ஆம் ஆண்டின்  ஜூன் மாத ஆய்வறிக்கைகளின்  சான்றுகளின் பிரகாரம் வைரஸ் தாக்கத்திற்கான ஒரு சாத்தியமான திசையாக இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதே போன்று கொவிட் -19 இல் சீனாவின் உலகளாவிய செயல்பாட்டின் மற்றொரு சிக்கலும் வெளிப்படுகின்றது. அதாவது, 90 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

சீன தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட இந்த நாடுகளில் பல இன்று தொற்றுநோயின் புதிய அலையை எதிர்க்கொண்டுள்ளன. சிலி, பஹ்ரைன், மங்கோலியா மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை 2021 ஜூன் மூன்றாவது வாரத்தில் மிக மோசமான கொவிட் -19 தாக்கத்தை கொண்ட முதல் பத்து நாடுகளில் உள்ளடங்குகின்றன. அதன் தாக்கத்தை உணரும் மற்றொரு குறிப்பிடத்தக்க நாடு மங்கோலியாவாகும். மொத்த  மக்கள்தொகையில் 52 சதவீதத்தினருக்கு சீன தடுப்பூசிகளைப் போட்டுள்ளது. ஆனால் இங்கு 2021 ஜுன் மாதத்தில் 2,400 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கொவிட் - 19 உருமாறிய வைரஸ்கள் பரவுவதை தடுப்பதில் சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்காது என்று நியூயார்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இது வெறும் தற்செயலானதொரு சம்பவமா  அல்லது உலகின் பிற பகுதிகளுக்கு எதிரான திட்டமிட்ட சீனத் தாக்குதலா? என்ற சந்தேகங்களும் நீண்ட காலமாக வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04