அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி

Published By: Digital Desk 4

04 Jul, 2021 | 08:41 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இன்று இரவு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் | Virakesari.lk

மே மாதம் முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஜூன் 21 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டன.

எனினும் சுகாதார தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

ஜூன் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகள் ஜூலை 5 வரை நடைமுறையிலிருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் போதிலும் , பொலிஸ், இராணுவம், சுகாதாரம், மின்சாரசபை, பெற்றோலியம், நீர்வழங்கல், ஊடகங்கள் , தனியார் மற்றும் அரச அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் நிறுவன பிரதானிகளால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை 1022 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 265 079 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 233 317 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 28 571 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு நேற்றைய தினம் 45 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவை சனிக்கிழமை பதிவான மரணங்கள் ஆகும். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3236 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் யடிவாவல கிராம உத்தியோகத்தர் பிரிவின் சாகராதெனியவத்த பகுதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டது.

இதே வேளை களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் மஹவஸ்கடுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு , மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் பெரிய கல்லாறு 2, 3, பெரிய கல்லாறு 3 தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவு - பெரமன தெற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46