விடுதலைப் புலிகள் அமைப்பை பிரசித்தப்படும் வகையில் செய்திகளை பதிவேற்றிய இளைஞன் கைது

Published By: Digital Desk 3

03 Jul, 2021 | 06:19 PM
image

(செ.தேன்மொழி)

இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பினை பிரசித்தப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை பதிவிட்டமை தொடர்பில் திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜிர் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் செய்திகளைப் பதிவிட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் புகழும் வகையிலான பதிவுகளை குறித்த சந்தேகநபர் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் குழுவாக தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டம் ஆகியவற்றின் குற்றமாகக் கருதப்படுவதால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31