மேற்குலகம் கேட்கும் கேள்விகளுக்கு 'ஆயிரம் தடவை மன்னிப்புக்கோருகின்றோம் சார்' என்று கூறுவோரே.. அன்று எம்மை துரோகிகள் என்றனர்: பிமல் ரத்நாயக்க

Published By: J.G.Stephan

03 Jul, 2021 | 02:07 PM
image

(நா.தனுஜா)
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் வலியுறுத்தியபோது எம்மை 'துரோகிகள்' என்றும் 'நாட்டுப்பற்று அற்றவர்கள்' என்றும் கூறியவர்கள், அதேவிடயத்தை மேற்குலகம் வலியுறுத்தும்போது மாத்திரம் 'மன்னித்துவிடுங்கள் நீங்கள் கூறியதை செய்துமுடித்துவிட்டோம்' என்று கூறிக்கொண்டே உடனடியாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பிமல் ரத்நாயக்க அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

'பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் கோரியபோது துரோகிகள், நாட்டுப்பற்று அற்றவர்கள், மேற்குலக நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுபவர்கள் என்றும் மாட்டைக் கொல்வது போன்று கொல்லவேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தித் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மேற்குலகம் கேட்கும்போது, 'ஆம் சார், மன்னித்துவிடுங்கள் சார், ஆயிரம் தடவை மன்னிப்புக்கோருகின்றோம் சார், கூறியதை செய்துமுடித்துவிட்டோம் சார்' என்று கூறியவாறு அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவித்திருக்கிறது' என்று பிமல் ரத்நாயக்க அவரது பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13