கொழும்பைத் தவிர வேறு பகுதிகளில் டெல்டா வைரஸ் இனங்காணப்படவில்லை

Published By: Digital Desk 4

03 Jul, 2021 | 05:46 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் கொழும்பை தவிர வேறு பகுதிகளில் இது வரையில் டெல்டா வைரஸ் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான புத்தாண்டு கொத்தணியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை ஒரு இலட்சத்து 61 629 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2335 தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க மூன்றாம் அலையில் மாத்திரம் 2511 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கொவிட் செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்,

கொழும்பு -  தெமட்டகொட பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்ட தொற்றாளர்களைத் தொடர்ந்து இதுவரையில் வேறு எந்த பிரதேசத்திலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் வேறு ஏதேனும் பகுதிகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் டெல்டா வைரஸ் காணப்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் வைரஸ் பரவியுள்ளது என்பதை தனித்தனியாக உறுதி செய்வது நடைமுறை சாத்தியமற்றது.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அத்தியாவசியமானது என்றார்.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

வெள்ளிக்கிழமை 1737 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 262 074 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 229 541 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 29 413 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 37 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை நேற்று வியாழக்கிழமை பதிவானவையாகும். அதற்கமைய இலங்கையில் கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 3157 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒபேசேகரபுர கிராம உத்தியோகத்தர் பிரிவும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஓலந்த கிராமம், ஹெந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரபர்வத்த கிராமமும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடுவகல தோட்டத்தின் மேற்பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

இதே வேளை நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் யட்டிஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன வீதி, லேக்வியூ வீதி, முதலீட்டு சபை வீதியின் வாவி வீதிக்கு திரும்பும் பகுதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள், மீஹகவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் தேவாலய வீதி, ஆரியதாச விதானகே மாவத்தை, சியம்பலாபெவத்த - கந்துபொட வீதி ஆகிய பகுதிகளும், மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமதஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56