இலங்கையில் paper straw வை அறிமுகப்படுத்தும் நெஸ்லே நிறுவனத்தின் மைலோ

Published By: Gayathri

02 Jul, 2021 | 05:49 AM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியினூடாக ஆண்டொன்றுக்கு 90 மில்லியன் plastic straw களின் பாவனை அகற்றப்படும்.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புக்களில், நுகர்வோர் மத்தியில் மிகவும் அபிமானம் பெற்ற மைலோ வர்த்தகநாமம் அதன் பிரபலமான Ready-to-Drink (RTD) தயாரிப்பில் paper straw களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

இலங்கையில் நுகர்வோர் சூழலின் பேண்தகமையைப் பேணுகின்ற வகையில் RTD பான வகை ஒன்றினால் முதன்முதலாக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியின் மூலமாக நிறுவனம் ஆண்டொன்றுக்கு 90 மில்லியன் plastic straw களை அகற்ற இடமளிப்பதுடன், மேலும் அனைத்து புதிய மைலோ பொதியிடல் செயற்பாடுகளும் 100%  மீள்சுழற்சி செய்யக்கூடியதாக மாறும். 

இந்த முயற்சி நெஸ்லே தனது பொதியிடல் செயற்பாடுகளின் மூலமாக ஏற்படுகின்ற தாக்கத்தை குறைக்க எடுக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மேலும், பால் அட்டைப்பெட்டிகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழிற்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இது Tetra Pak மற்றும் நெஸ்லே போன்ற உணவு மற்றும் பான வகை நிறுவனங்களின் துணையுடன் இயங்கும். 

இந்த தொழிற்சாலை மைலோ RTDஐ மீள்சுழற்சி செய்யும் என்பதுடன், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த பான அட்டைப்பெட்டி தொழிற்துறைக்கும் பயனளிக்கும். மைலோ RTD பானம் அருந்தி முடிக்கப்பட்ட பின்னர், அவற்றை பொறுப்புணர்வுமிக்க முறையில் அப்புறப்படுத்தல் மற்றும் மீள் சுழற்சிக்காக சேகரித்தல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக கல்வியமைச்சு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் உரிய மாநகர சபைகளுடன் இணைந்து நெஸ்லே நிறுவனம் தற்போது முன்னெடுத்து வருகின்ற பாடசாலைகள் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் அனுகூலத்தை இதற்காக உபயோகிக்கும். 

இது 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 250 பாடசாலைகளை எட்டும். பிளாஸ்டிக் பொதியிடல் கழிவுகளுக்கான சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நிறுவனம் பல முன்னேற்றகரமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

'திறன்மிக்க கழிவு முகாமைத்துவத்தின் தேவை என்பது நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த தயாரிப்பு வகையில் முதன்முதலாக paper straw  களை நெஸ்லே நிறுவனம் தானாகவே முன்வந்து, இலங்கை மக்கள் அனுபவித்து மகிழ இன்னும் கூடுதலான அளவில் பேண்தகமை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 

நாட்டின் மற்றும் அதன் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, தூய்மையான மற்றும் பசுமையான இலங்கைக்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இன்னும் அதிகமான நிறுவனங்கள் ஆதரவளிக்க முன்வருவதைக் காண்பதில் ஆவலாக உள்ளோம்" என்று சுற்றுச்சூழல் அமைச்சரான மஹிந்த அமரவீர அவர்கள் குறிப்பிட்டார்.

'நெஸ்லே நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வதற்கான சவாலை படிப்படியாக முன்னெடுத்துச் செல்வதிலும், சுற்றாடல் தொடர்பான எமது இலக்கினை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. 

அடுத்த சில ஆண்டுகளில் நாங்கள் திட்டமிட்டுள்ள பல்வேறு முக்கியமான சுற்றாடல் முயற்சிகளில் இது முதல் முயற்சியாகும். 2022ஆம் ஆண்டளவில் மைலோ பிளாஸ்டிக் பாவனை மற்றும் அதன் அப்புறப்படுத்தல் தொடர்பில் நடுநிலைமையை அடையவும், மீதமுள்ள எமது தயாரிப்பு பொதியிடல்களை 2025ஆம் ஆண்டுக்குள் 100% மீள்சுழற்சி செய்யக்கூடியதாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். 

இலங்கையின் எதிர்காலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்வதுடன், எங்கள் நுகர்வோருக்கு மட்டுமல்லாது, எமது பூமிக்கும் நன்மைபயக்கின்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் காவலின் அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் நுகர்வோர் மத்தியில் இந்த மாற்றத்திற்கு உதவ, நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் பொறுப்புணர்வுடன் அகற்றலை ஊக்குவிப்பதற்கும் பரந்த அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

'40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையர்களின் அபிலாஷைகளை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் மைலோ செயற்பட்டு வந்துள்ளது. நாட்டில் புத்தம்புதிய பாலைக் கொள்வனவு செய்து உள்நாட்டிலுள்ள பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை நாம் மேம்படுத்தியுள்ளதுடன், விளையாட்டுக்கள் மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கும் பல்வேறு வழிகளில் பங்களித்துள்ள நிலையில், தற்போது சுற்றாடல் தொடர்பில் துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். 

எங்கள் பூமியைப் பாதுகாக்க எங்கள் பங்கை ஆற்றுவதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்" என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ உற்பத்திப் பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி அவர்கள் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் ஏனைய RTD தயாரிப்புகளான நெஸ்பிறே (Nespray) மற்றும் நெஸ்கஃபே (Nespray) ஆகியவையும் இந்த ஆண்டிற்குள் paper straw களை அறிமுகப்படுத்தி 100% மீள்சுழற்சி செய்யக்கூடியதாக மாற்றம் காணவுள்ளன.

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: இடமிருந்து வலப்புறமாக - வைத்தியர் அனில் ஜாசிங்க, செயலாளர், சுற்றுச்சூழல் அமைச்சு, ஃபேப்ரிஸ் காவலீன், முகாமைத்துவப் பணிப்பாளர், நெஸ்லே லங்கா பிஎல்சி மற்றும் கௌரவ மகிந்த அமரவீர, சுற்றுச்சூழல் அமைச்சு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58