டெல்லி ஜி.பி. சாலையில் 5000 பெண்களை வைத்து விபசார தொழில் செய்வதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்யும் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் மற்றும் அவர்களுக்கு உதவியாய் இருந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

விபசாரத்திற்காக, நேபாளம், வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து இவர்கள் விபசார தொழில் செய்து வந்துள்ளனர். 

விபசாரத்தில் 5000 பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்பெண்கள் மூலம் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர். இவர்களுக்கு பல மாநிலங்களில் சொத்துகள், சொகுசு கார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது