கூட்டணிக்குள் ஏற்படும் பிளவு எதிர்தரப்பினருக்கு சாதகமாகவே அமையும்: ரோஹித அபேகுணவர்தன

Published By: J.G.Stephan

01 Jul, 2021 | 05:40 PM
image

(இராஜதுரை ஹஷான்) 
கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் கூட்டுப்பொறுப்புடன்  செயற்பட வேண்டும். அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது ஒரு தரப்பினரால்  முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட  அரசியல் சூழ்ச்சி இம்முறை வெற்றிப் பெறாது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. பல்வேறு கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை ஒன்றினைத்து ஆட்சியமைக்கும் போது  பல முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு.

 முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.  அதனை விடுத்து கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அது எதிர் தரப்பினருக்கு சாதகமாக அமையும்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டை ஒரு தரப்பினர் தற்போது முன்னெடுத்துள்ளார்கள். 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற அரசியல் சூழ்ச்சி இம்முறை வெற்றிப் பெறாது. கொவிட் வைரஸ்  தாக்கம் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

 கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.  இந்த பிரச்சினையினை கொண்டு எதிர் தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34