புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை 

Published By: Gayathri

01 Jul, 2021 | 05:25 PM
image

புரெவிப் புயலினால்  பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய செயற்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயல் காற்றின் காரணமாக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான பல கோடி பெறுமதியான  தொழில் உபகரணங்கள் அழிவடைந்துள்ளன. 

அவைதொர்பான முழுமையான மதிப்பீட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.  அதன் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, அம்பன் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு பல மில்லியன் ரூபாய்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடாக பெற்றுக் கொடுத்துள்ளோம்.

அதேபோன்று புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களும் பெற்றுக்கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், தூற்றுவார் தூற்றட்டும் புழுதி வாரிப் பூசுவார் பூசட்டும், மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சிகனைகளை தீர்த்து வைக்கும் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது அரசியல் செயற்பாடுகளின் அவசியத்தினையும் நியாயத்தினையும் கடந்த காலங்களில் மக்கள் புரிந்து கொண்டதைப்போன்று எதிர்காலத்திலும் புரிந்து கொள்வார்கள்  எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04