விமல், கம்மன்பிலவின் அமைச்சரவை அந்தஸ்து பறிபோகும் நிலை - நளின் பண்டார

Published By: Digital Desk 3

01 Jul, 2021 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பங்காளி கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

இவ்வாறான முரண்பாடுகளுக்கு மத்தியில் மிக விரைவில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

எமக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சரவை அந்தஸ்து பறிபோகவுள்ளதாக தெரியவந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள இலங்கை நாணயத்தாள்களில் அச்சிடுவதில் மாத்திரம் முன்னிலை வகிக்கிறது.

கடந்த சில வாரங்களில் மாத்திரம் 11,280 கோடி ரூபா அதாவது 22.5 கோடி 5,000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

அத்தோடு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அரிசி மாபியாக்களிடம் அரசாங்கம் தலைவணங்கிக் கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21