அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 3

01 Jul, 2021 | 04:02 PM
image

(நா.தனுஜா)

அஸ்ட்ராசெனிகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்கு இடையில் சுமார் 11 மாதகால இடைவெளி காணப்பட்டாலும், கொவிட் - 19 வைரஸிற்கு எதிரான நோயெதிர்ப்புசக்தி விருத்தியில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்துவரும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்று செய்யப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்திசெய்த நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளுடன் இணைந்ததாக உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையின் காரணமாக அஸ்ட்ராசெனிகா முதலாம்கட்டத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாடுகள், இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெறுவதில் தாமதமேற்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் முதலாம்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக வேறொரு தடுப்பூசியை வழங்கல முடியுமா? இரண்டாம் கட்டத் தடுப்பூசியை எவ்வளவு கால அவகாசத்திற்குள் வழங்குவதன் ஊடாக நோயெதிர்ப்புசக்தியை மேம்படுத்திக்கொள்ளமுடியும்? ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் அண்மைக்காலத்தில் வெளியாகிவந்தன. இவ்விடயம் தொடர்பில் தற்போது ஆரம்பகட்டப் பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பரிசோதனைகளின் முடிவுகள் நேர்மறையானவையாகவே அமைந்துள்ளன.  

இந்நிலையில் அண்மையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளின் படி அஸ்ட்ராசெனிகா  முதலாம் கட்டத்தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்டத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இடையிலான கால இடைவெளி 45 வாரங்கள் வரை நீடித்தாலும்கூட நோயெதிர்ப்புசக்தி மேம்பாடு அடைகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தடுப்பூசிப் பற்றாக்குறையின் காரணமாக, தமது மக்களுக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியை வழங்குவதில் தாமதத்தை எதிர்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்தத் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

அதேவேளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பரிசோதனைகளில் மூலம் முதலாம்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதன் ஊடாக நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆரம்பகட்டப்பரிசோதனைகளின் பிரகாரம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம்கட்டமாக மேற்கூறப்பட்டவாறான பிறிதொரு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை வழங்குவதற்கு நிகரான பிரதிபலன் கிடைக்கப்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதன்மூலம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறையின் காரணமாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடுகள் பயனடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57