ஜனாதிபதி விருதை தனதாக்கிய Zone24x7

Published By: Priyatharshan

01 Sep, 2016 | 02:39 PM
image

2014/15 காலப்பகுதிக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் உயர் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளுக்கான விருதை Zone24x7 சுவீகரித்திருந்தது.

இந்த வைபவம் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 2016 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு Zone24x7 வழங்கி வரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதை 2014 மற்றும் 2015 ஆகிய காலப்பகுதிக்காக Zone24x7 வென்றிருந்ததுடன் இதன் மூலமாக புத்தாகமான தயாரிப்புகள் உற்பத்தி துறையில் முன்னோடியாக திகழ்வது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2003 இல் நிறுவப்பட்ட தொழில்நுட்ப புத்தாக்க தீர்வுகள் வழங்கும் சர்வதேச நிறுவனமாக Zone24x7 Inc. அமைந்துள்ளது. 

இதன் தலைமையகம் கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலி பகுதியில் அமைந்துள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியைப் பெற்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப நிலையமாக Zone24x7 பிரைவட் லிமிட்டெட் காணப்படுகிறது. 

இந்நிறுவனத்தின் ஆய்வு நிலையம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Zone24x7 Inc. இன் உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக Zone24x7 பிரைவட் லிமிட்டெட் திகழ்கிறது. 

புத்தாக்க சேவைகள், உட்கட்டமைப்புகள், பரிசோதனை மற்றும் மென்பொருள் பொருட்கள் பொறியியல் போன்ற சேவைப் பிரிவுகளில் முன்னணி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமாக செயலாற்றி வருகிறது.

Zone24x7 ஐ லாவன் பெர்னான்டோ நிறுவியிருந்ததுடன் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் இவர் திகழ்கிறார். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சம்மேளனத்தின் (SLASSCOM) ஆலோசகராகவும் லாவன் திகழ்கிறார். 

உலகின் மூன்று முன்னணி விற்பனை நிலையங்களில் இரு நிலையங்களின் புத்தாக்க பங்காளராக நிறுவனம் திகழ்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த 10 வருடங்களில் இந்நிறுவனம் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. 2013 இல் முதலாவது விருதை தேசிய சிறந்த தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவில் வெள்ளி விருதை Zone24x7 பெற்றது. 

ஆசிய பசுபிக் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இணைவு விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதையும் பெற்றுக் கொண்டது.

இது போலவே, 2015 இல், NBQSA விருதுகள் வழங்கும் நிகழ்வில்ரூபவ் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்தது. 

அதே ஆண்டில் APICTA விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பிரிவில் வெற்றியாளராகவும் தெரிவாகியிருந்தது. ஒரு தசாப்த காலத்துக்கும் அதிகமான அனுபவத்துடன், Zone24x7 வெற்றிகரமாக செயற்படுவதுடன் ஃபோர்சூன் 1000 நிறுவனங்களுக்கு சேவைகளையும் வழங்கி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57