உலகம் முழுவதிலும் தற்போது பரவியிருக்கும் பேலியோ டயட் என்ற உணவு முறையால் மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸ்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

சர்க்கரை வியாதி, உயர் குருதி அழுத்தம் போன்ற நோயின் காரண கர்த்தா எம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத உடல் எடை. உடல் எடையின் அதிகரிப்பால் பல ஆரோக்கிய கேடுகள் சொல்லாமலேயே வருகின்றன.  இதற்கு மருத்துவர்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அவர் ஒரு உணவு கட்டுப்பாட்டு பட்டியலை முன்வைப்பார். அதனை நீண்ட காலம் பின்பற்றினால் தான்  உடல் எடை கட்டுக்குள் வரும். ஆனால் மக்கள் உடனடியாக உடல் எடை குறையவேண்டும் என்று விரும்பி, இணைய உலகத்தால் முன்மொழியப்பட்ட பேலியோ டயட்டை பின்பற்றுகிறார்கள்.

இதனால் பலருக்கு உடல் எடை குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆரோக்கியமானவுடன் வலியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மருத்துவ துறையினர் இந்த பேலியோ டயட் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பேலியோ டயட் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்வைத்தாலும், அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலை கழக விஞஞானிகள், இதனை பரிசோதித்து இந்த டயட்டை பின்பற்றுவதால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

டொக்டர் எஸ் அசோக் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்