சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் - டக்ளஸ் தேவானந்தா

Published By: Digital Desk 3

01 Jul, 2021 | 10:25 AM
image

சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை தொடர்பாக நேற்று (30.06.2021) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த அப்போதைய அரசாங்கத்திடம் அவசியமான அனுமதிகளைப் பெற்றுக் கொண்ட குறித்த சீன நிறுவனம், அரியாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றினைக் குத்தகைக்கு பெற்று கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.

பின்னர், அரியாலை கடல் பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினையும் அமைத்து செயற்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணை ஒன்றினையும் அமைத்துள்ளார்கள்.

கடலட்டைப் பண்ணைகள் தொடர்பான அனுமதிகள் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த சீன நிறுவனத்திற்கான அனுமதிகள் நக்டா நிறுவனத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படடுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வௌயிட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆராய்ந்து பூரணமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அதேவேளை, விரைவில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பிரதேச கட்றொழிலாளர் சங்கம் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த சீன நிறுவனம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19