கைவிடப்பட்டது கைதிகளின் போராட்டம் 

Published By: Digital Desk 4

30 Jun, 2021 | 06:33 PM
image

(செ.தேன்மொழி)

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் மரண தண்டனை கைதிகளால் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை கைவிடப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் , சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை , ஆயுள் தண்டனையாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் , இன்று புதன்கிழமையுடன் அது கைவிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் கலந்துக் கொண்டிருந்ததுடன் , இதன்போது வெலிக்கடை சிறைசாலையில் உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் கூறையின் மேல் ஏறியிருந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கைதிகளின் இந்த கோரிக்கை தொடர்பில் 5 மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன் , அது தொடர்பில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் கைதிகளுக்கு தெளிவிப்படுத்தியிருந்தனர். எனினும் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் மீண்டும் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன் , அவர்களது கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு விளக்கியிருந்தனர்.அதற்கமைய கைதிகள் தங்களது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47