நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: விவசாயத்துறை அமைச்சர்

Published By: J.G.Stephan

30 Jun, 2021 | 04:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 6 மாத காலத்திற்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறந்த திட்டமிடலுக்கு அமையவே  இரசாயன உரம் இறக்கமதி மற்றும், பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால்  5 சதவீதமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். சேதன பசளை உற்பத்தி மற்றும் பாவனை  தீர்மானம்  எதிர்கால நலனை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உணவு  பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு விவசாயத்துறை அமைச்சுக்கு  உண்டு.

  சேதன பசளை உற்பத்தி தற்போது தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்போக விளைச்சலுக்கு தேவையான சேதன பசளை பெருமளவில் உற்பத்தி செய்யபபட்டுள்ளன. அவை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படும்.  இரசாயன உரம் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 நெல், அரிசி ஆகியவற்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை குறித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானிக்கு புறம்பாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகரிடமிருந்து அறவிடப்படும் தண்ட பணத்தை 1 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனை ஒரு  மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11