கடும் வெப்பத்தால் கனடாவில் பலர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

30 Jun, 2021 | 06:03 PM
image

கனடாவில்  முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனடாவில் அதிகரித்த வெப்பம் காரணமாக  130 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வான்கூவர் பகுதி பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்களாக  இருப்பதால் இவர்கள் உயிரிழப்பதற்கு வெப்பம் ஒரு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லிட்டன் பகுதியில் செவ்வாயன்று  சராசரியாக 49.5 டிகிரி செல்சியஸ் (121  டிகிரி பரனைட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதன் மூலம் கனடா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக அதிகரித்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. இந்த வாரத்திற்கு முன்பு, நாட்டின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடக்கவில்லை.

கனடா மற்றும் அமெரிக்க பசிபிக் வடமேற்கில் ஏற்பட்ட ‘வெப்ப குவிமாடம்’ எனப்படும் ஒரு நிகழ்வு வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

வன்கூவர் நகரில் 65 பேர் உயிரிழந்தமைக்கு வெப்பம் ஒரு காரணியாக இருப்பதாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பர்னபியின் புறநகர்ப் பகுதி குறைந்தது 34 பேரும், சர்ரே பகுதியில் 38 பேரும் திடீரென உயிரிழந்துள்ளார்கள்.

இந்த வெப்பநிலை உயர்வால் தற்போது மேற்கு கனடா வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளது. உயிருக்கு ஆபத்தான வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க, குளிர்ச்சியான சூழலில் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சியாட் நகரத்தின் 725,000 மக்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட குளிர்ச்சியான இடங்களில் தங்கவும், வீட்டில் குளிர்சாதன வசதி இல்லையென்றால் அரசின் "குளிரூட்டும் மையத்திற்கு" செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கடுமையான வெப்பத்தின் விளைவாக பொது போக்குவரத்து, அவசர மருத்துவ சேவைகளில் தாமதங்கள் மற்றும் மின் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13