கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவிப்பு

Published By: J.G.Stephan

30 Jun, 2021 | 11:55 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் 19 தொற்று நிலைமையால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் துறைகளில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக சலுகை வழங்கும் நோக்கில் தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய  அனைத்து  ஊழியர்களுக்கும் பணிபுரிவதற்காக சமமான வாய்ப்புக்களை வழங்கல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின், இறுதியாக செலுத்தப்பட்ட மொத்த மாதாந்தச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது 14,500 ரூபா தொகையில் அதிக நன்மை கிட்டும் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர்  சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குப் பணம் செலுத்தல், உலகளாவிய ரீதியில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக எமது நாட்டில் சுற்றுலாத் துறையை வழக்கமான வகையில் பேணிச்செல்ல இயலாததுடன், குறித்த துறையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு  தற்போது வழங்கப்பட்டுவரும் சலுகைகளை யூலை தொடக்கம் டிசம்பர் மாதம் இறுதி வரைக்கும் மேலும் நடைமுறைப்படுத்தும் வகையில் தொழில் உறவுகள் அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21