இன்று காலை முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Published By: Vishnu

30 Jun, 2021 | 11:00 AM
image

ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 34 ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று காலை 8.00 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என  ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திடீர் ரயில்வே வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தடுக்க இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ்களை சேவைக்காக நிறுத்தியுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தடையில்லா போக்குவரத்தை வழங்க தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து டிப்போ மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கடமைகளுக்காக பயணிக்கும் அனைத்து ஊழியர்களும் டிப்போ மேலாளர்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58