மத்திய கிழக்கிற்கான பயணக் கட்டுப்பாடு ; இலங்கை தூதரகத்தின் அறிவிப்பு

Published By: Vishnu

30 Jun, 2021 | 10:41 AM
image

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிப்பதற்கன பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 01 முதல் அமுலாகவுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளிடையே கொவிட்-19 தொற்று அதிகரித்த போக்கு காணப்படுகின்றமையால் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை கவனித்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளான, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்புவதற்ற்கான பயணக்கட்டுப்பாடுகள் 2021 ஜூலை 01 முதல் 2021 ஜூலை 13 வரை அமுலில் இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களின் கவலைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து தூதரகமனது இலங்கையின் உயர்மடட அரச ஆணயத்திற்கு தெரிவிக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இலங்கை தூதரகமானது இந்த விடயத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதுடன், இந்த கடினமான நேரத்தில் உங்களின் நல்ல புரிதல் மற்றும் ஒத்துழைப்பிற்கு பாராட்டினை தெரிவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதிஅரேபியா, ஓமான், பஹரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55