களுத்துறை பிரதேசத்தில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு மற்றும் நாகொடை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி இன்று நண்பகல் 2 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.