வடக்கையும் கிழக்கையும் ஆன்மீக பலத்தால் மேம்படுத்திய ரங்கராச்சியம்

30 Jun, 2021 | 04:33 PM
image

நவீன யுகத்தின் தொழில்நுட்பத்தையும் மனிதவளத்தையும் ஒன்றிணைத்து வடக்கையும் கிழக்கையும் ஆன்மீக பலத்தால் மேம்படுத்திய ரங்கராச்சியம் தன்னலம் கருதாது மக்கள் சேவையே மகேசன் சேவை எனக்கருதி மக்கள் நலனுக்காக தன்னை அர்பணித்த பெருமகன்  ரங்கராஜானின் ஓராண்டு நிறைவாகும் நிலையில் அவர் பற்றிய நினைவுப் பதிவுகள்.

“பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்” என்றான் பாரதி. சாதாரண மனிதன் தனக்கென்று வாழ்ந்து மரணித்து விடுகின்றான். ஆனால் பிறருக்காக வாழும் மனிதன் மரணத்தை வென்று சாகா வரம் பெற்று சஞ்சீவியாகின்றான். வடக்குக் கிழக்கின் மேம்பாட்டை வரைந்து தன் நிர்வாகத்தில் ஆன்மீக பலத்தால் கட்டியெழுப்பி வரலாற்று நாயகனாகத் திகழ்பவர் அமரர் சி.ரங்கராஐன்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு அலுவலையும் இறைவனுக்காக செய்கின்ற அலுவலாக செய்யலாமல் அதனாலே எமது செயல்கள் பரிசுத்தம் அடைவதோடு நாம் செய்வதே இறைவனது செயலாக மாறுகின்றது. 

அத்தகைய நிலை எம்மை எமது கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து பிரபஞ்ச உணர்வோடு ஐக்கியமாகி செயற்படுகின்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற ஞானிகளின் அனுபவ சித்தாந்தத்தை அமரர் தன் அனுபவ உண்மையாகப் பல இடங்களில் கூறியுமிருக்கின்றார் எழுதியுமிருக்கின்றார்.

அமரர் சி.ரங்கராஜாவின் மணிவிழா மலரான ரங்க ராஜாங்கம் என்ற நூலில் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் என அமரரால் எழுதப்பட்ட கட்டுரை இக்கருத்தை அரண் செய்யும் வகையிலே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆளுமை மிக்க நிர்வாகியான அமரர் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர். மக்களுக்கு சேவையாற்றுவதே மகேசனுக்கு செய்யும் பெருந் தொண்டு என்ற ஆன்மீக நோக்கிலேயே தன் உத்தியோகத்தை அங்குள்ள நிர்வாகத்தை நடத்தியவர்.

பாண்டு ரங்கனாகிய பொன்னாலையில் வீற்றிருந்து அருள் புரியும் வரதராஐனை தன் குலதெய்வமாக கொண்டு ரங்கராஐன் செய்த  திருத்தொண்டே அவர் ஆற்றிய நிர்வாகப் பணிகள் வரதராஐப் பெருமானில் மிகுந்த பக்தி கொண்டவர்கள் பெற்றோர் அவ்வகையில் அமரர் கருவுறும் காலத்திலேயே திருவருள் வழியில் ஆன்மீக சக்தியை பெற்றுக்கொண்டவர். அமரரின் பிறப்பும் கல்வியும் அமரர் ரங்கராஐா சிவகுருநாதன் (நாராயணதாசன்)ரோகினிஅம்பாள் தம்பதியினருக்கு 02.02.1949 ஆம் ஆண்டு பொன்னாலை சுழிபுரத்தில் 3 ஆவது மகனாகப் பிறந்தார்.

பொன்னாலை வரதராஐா வித்தியாலத்தில் தனது ஆரம்பக்கல்வியை பெற்றுக்கொண்ட அமரர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் திறமை சித்தியடைந்து யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலத்தில் (Stanly college Jaffna) தன் இடைநிலை கல்வியை தொடர்ந்தார். 

 அங்கு கா.பொ.த சாதாரண தரம் வரை கற்றார். பின் கா.பொ.த உயர்தரப் படிப்பை சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் பெற்றுக்கொண்டார். பட்டப்படிப்பை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.

பொருளாதாரம் அரசறிவியல் ஆகிய பாடங்களை கொண்ட கலைமாணி தேர்விலும் வணிகமாணி தேர்விலும் முறையே 1971ஆம் ஆண்டுகளிலும் 1974ஆம் ஆண்டுகளிலும் பட்டப்படிப்புக்களை முடித்துக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டமையால் பட்டைய கணக்காளர் (CIMA) ஆகிய இரண்டு கற்கை நெறிகளையும் கற்றுக்கொண்டிருந்த இவர் அவற்றை முழுமையாக கற்க முடியவில்லை.

மேற்கூறப்பட்ட இரண்டு கற்கைநெறிகளிலும் 2ஆம் தரம் வரை சித்தியடைந்திருந்தார். விவசாய பொருளியல் கற்கைநெறியில் தனது முதுவிஞ்ஞானமானிப் பட்டத்தையும் 1991ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டார்.

அமரர் மேற்படி முறைசார் கற்கைநெறிகளை கற்றதுடன் அபிவிருத்தி, நல்லாட்சி, நிதி முகாமைத்துவம் போன்ற விடயங்களில் சுயகற்றலை மேற்கொண்டு தனது கல்விப் புலத்தை விரிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பதவிகளும் செயற்பாடுகளும் அமரர் 1970 ஏப்ரல் 16 ம் திகதி அன்று ஓர் எழுதுவினைஞ்ஞராக அரசசேவையில் இணைந்தார். பேராதனை விவசாய திணைக்களத்தில் நியமனம் பெற்றதால் தனது அரச சேவையையும் பட்டப்படிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள கூடியதாக இருந்தது.

1977ம் ஆண்டு ஐனவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்து SLIDA இல் பயிற்சியினை முடித்த பின் கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனை அம்பாறை சம்மாந்துறை ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

1981ஆம் ஆண்டில் திட்ட அமுலாக்கல் அமைச்சிற்கு இடமாற்றப்பட்டு மன்னார் கச்சேரியில் திட்டமிடல் உதவிப்பணிப்பாளராக கடமையாற்றினார்.

 ஆன்மீக பலம் பெற்ற ரங்கராஐன் இலங்கை நிர்வாக துறையில் குறிப்பாக வடக்கு கிழக்கு  மாகாண அரசியல் பொருளாதார விவசாயம் ஆகிய முப்பரிமணங்களிலும் செயற்பட்டு அவற்றினை மேம்படுத்த பாடுபட்டமை வடக்கு கிழக்கு அறிந்த பேருண்மை.அமரர் சகல சமயங்கள் மார்க்கங்கள் தொடர்பாகவும் தெழிவானதும் நுணுக்கமானதுமான ஆன்மீக ஞானத்தைக் கொண்டு இந்த நாட்டில் எவரும் குறை கூறமுடியாத அளவுக்கு யுத்தக் கனல் பற்றி எரிந்த காலத்தில் மக்களுக்கு சேவைகள் சென்றடைவதனை உறுதி செய்தார்.

இதனாலேயே சகல இன மக்களினதும் நன்மதிப்பையும் அன்பையம் பெற்றுக்கொள்ளத் தக்கதாகவும் சிறப்படைந்தார்.மேலைநாட்டவரையும் வியக்க வைக்கும் வகையில் விடயங்களை தெளிவாகவும் நுணுக்கமாகவும் எடுத்து கூறும் ஆற்றல் கைவரப்பெற்றவர் அமரர் கனடா அமெரிக்கா, ஜேர்மன், லண்டன் போன்ற வெளிநாட்டு ராஐதந்திரிகள் வடக்கு கிழக்கு பற்றிய முழுவிபரங்களையும் அறியக்கூடிய ஒரேநபர் ரங்கராஐன் என்று நம்பிக்கையுடன் அவரை அணுகுவர் அத்துடன் மற்றவர்களிடத்திலும் பார்க உங்களிடமே தெளிவான நுணுக்கமான விடயங்களை பெற்றுக்கொண்டோம் என்று அவரை பாராட்டி மீண்டும் தேவைப்படும் போதெல்லாம் உங்களை சந்திப்போம் என்று கூறிச்செல்வர்.

“யாவர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே” (மந்ரம் ) “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்பது பாரதி கூற்று மேற்போந்த ஆன்மீக வழித்தடத்தில் பயணித்தமையால் மற்றோருக்கு வழிகாட்டியாக தைரியத்தை கொடுப்பதாக அமைந்து கலங்கரை ளக்காக அவர் விளங்குறார்.

பொன்னாலை சுளிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களில் கடமைநிமித்தம் வாழ்ந்து பின் நல்லூர் பிரதேசத்தை வதிவிடமாக கொண்டார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற பொய்யா மொழிக்கு இணங்க மக்களுக்கும் உயிரினங்களுக்கும் தொண்டாற்றிய ரங்கராச்சியத்தால் 15.06.2020 இல் வழிபாட்டுக்குரியவரானார்.வடக்கு கிழக்கு பிரதம செயலாளராக தன ேசைவயால்

கதிரையை அலங்கரித்த பெருமகனார் ரங்கராஐன் அதற்கு பின்பும் தன் மனம் வாக்கு காயத்தின் தூய்மையான செயலால் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படுகின்றார்

ஆக்கம்

ரங்கராஐனின் அன்பர்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35