நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Published By: Vishnu

29 Jun, 2021 | 12:04 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின் போது நேற்று திங்கட்கிழமை மாத்திரம் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று மாத்திரம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதன்போது , மட்டக்குளி பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடமிருந்து ஒரு கிலோ 71 கிராம் ஹெரோயின் போதைப்  பொருள் , அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கிராண்ட்பாஸ் பொலிஸார் பாலதுறை பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 18 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் 54 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22