எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ; கிம்மின் நிலை கண்டு மனம் உடைந்த வடகொரியர்கள்

Published By: Vishnu

29 Jun, 2021 | 11:08 AM
image

ஜனாதிபதி கிம் யொங் உன்னின் "உடல் எடை இழப்பு" குறித்து மனம் உடைந்த வட கொரியர்கள் கண்ணீருடன் கவலையடைந்துள்ளனர்.

வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச ரீதியில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் யொங் உன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்சமயம் கிம் யொங் உன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.‌ இதனால் அவரது உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் கிம் யொங் உன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அடையாளங்களை வெளியிட விரும்பாத வடகொரிய பிரஜை ஒருவர், “கிம்மின் தோற்றத்தை நாங்கள் பார்த்தபோது எங்கள் மக்களின் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. அவரை பார்க்கிறபோது இயற்கையாகவே தங்கள் கண்ணில் கண்ணீர் வழிவதாக எல்லோரும் கூறுகின்றனர்” என தெரிவித்தார்.

சமீபத்திய அரச ஊடக புகைப்படங்களில், 37 வயதான கிம் கணிசமான எடையை இழந்ததாகத் தெரிகிறது. சுமார் 170 சென்டிமீட்டர் (5 அடி, 8 அங்குலங்கள்) உயரமும், முன்பு 140 கிலோகிராம் (308 பவுண்டுகள்) எடையும் கொண்ட கிம் 10-20 கிலோகிராம் (22-44 பவுண்டுகள்) இழந்திருக்கலாம் என்று சில வட கொரியா பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

சியோலில் உள்ள சில ஆய்வாளர்கள், கிம்மின் எடை இழப்பு சுகாதார பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்தனர்.

அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்திற்கு பெயர் பெற்ற கிம், இதய பிரச்சினைகள் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு முன் வட கொரியாவை ஆண்ட அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் இருதய பிரச்சினைகளால் உயிரிழந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47