ஜனாதிபதி எம்.பி.யான வரலாறு உலகில் எங்கும் உள்ளதா?

Published By: Robert

01 Sep, 2016 | 09:55 AM
image

மஹிந்த ராஜ­பக் ஷ தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார். இல்­லா­விட்டால் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் உலகில் எந்த நாட்­டி­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் வரு­வாரா என்று தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நாட்டில் நல்­லி­ணக்கம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை ஏற்­பட்­டுக்­கொண்டு செல்லும் நிலையில் ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு வந்­துள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை அவ­தா­னித்­துச்­ செல்­லவே அவர் வந்­துள்ளார். அத்­துடன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை மதிக்கும் வகையில் சர்­வ­தேச தலை­வர்கள் நாட்­டுக்கு வந்­த­வண்ணம் இருக்­கின்­றனர்.

அதே­போன்று அவர்­க­ளது நாட்­டுக்கு வரு­மாறு எமது தலை­வர்­க­ளுக்கும் அழைப்­பு­ வி­டுக்­கின்ற நிலை தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. இந்த நிலையை தொடர்ந்து தக்­க­ வைத்­துக்­கொள்­ள­ வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்­றது. அத்­துடன் அர­சாங்­கத்தில் ஊழல், மோச­டிகள் இடம்­பெ­றாது தடுக்­க­வேண்­டி­யது ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கட­மை­யாகும்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருக்கும் தூய்­மை­யா­ன­வர்­களே தன்­னுடன் இருப்­ப­தாக மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யாயின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இருப்­பது மோச­மா­ன­வர்­களா? மஹிந்­த­வுடன் இருப்­ப­வர்கள் யார் என்­பது மக்­க­ளுக்கு தெரியும். கடந்த அர­சாங்­கத்தில் பாரிய ஊழல், மோசடி செய்­த­வர்கள் அனை­வரும் அவ­ரு­டன்தான் இருக்­கின்­றனர். அதனால்தான் அவர்கள் நாளாந்தம் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­டு­கின்­றனர்.

அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஸ்தாபகர் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்­டார நாயக்­கவும் கட்­சியை உடைத்­துக்­கொண்டு வந்­துதான் கட்சி ஆரம்­பித்தார். பண்­டார நாக்­கவின் கொள்­கை­யைத்தான் மஹிந்த ராஜபக் ஷவும் பின்­பற்­று­கிறார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உத­ய­கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் நாட்டில் ஐக்­கிய தேசிய கட்சி மாத்­தி­ரமே இருந்­தது.

அக்கட்­சியில் இருந்து வெளி­யே­றித் தான் கட்சி ஆரம்­பித்தார் என்­பதை கம்­மன்­பில அறி­யாமல் இருக்­கின்றார். அத்­துடன் நாட்­டுக்கு உறு­தி­யான எதிர்க்­கட்சியின் தேவை கரு­தியே அவர் செயற்­பட்டார். அத­னால்தான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறு­தி­யாக இருக்­கின்­றது.

அதே­போன்று பண்­டா­ர­நா­யக்க குடும்பம் தனது சொத்­துக்­களை நாட்­டுக்­காக கொடுத்த குடும்­ப­மாகும். இதுதான் பண்­டா­ர­நா­யக்­க­வுக்கும் மஹிந்­த­வுக்கும் உள்ள வித்­தி­யா­ச­மாகும். அத்­துடன் நாட்டில் இருந்த அனைத்து கட்­சி­க­ளையும் மஹிந்­தவே துண்­டா­டினார். தற்­போது அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார். இல்­லா­விட்டால் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் உலகில் எந்த நாட்­டி­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் வருவாரா என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04