அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் 70 வயதுக்கு குறைந்தோருக்கும் 2 ஆம் கட்ட தடுப்பூசி

Published By: Digital Desk 4

28 Jun, 2021 | 10:27 PM
image

(எம்.மனோசித்ரா)

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் அடுத்த தொகை கிடைக்கப்பெற்றவுடன் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களில் 70 வயதுக்கு குறைந்தோருக்கு , இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

போக்குவரத்து கட்டுப்பாடு தளர்வு சுதந்திரமாக நடமாடுவதற்கல்ல - சுகாதார அமைச்சு  வலியுறுத்து | Virakesari.lk

கொழும்புமாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய ஏனையோருக்கு அதாவது 70 வயதுக்கு குறைவானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி எப்போது வழங்கப்படும் என்று வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்

இந்நிலையில் மேம் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால் தயார்படுத்தப்பட்டுள்ள தடு;ப்பூசி வழங்கும் நிலையங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களுக்காக விசேட வேலைத்திட்டம்

கொவிட்-19 நோயாளர்களை வீடுகளிலேயே பராமரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இதே வேளை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 2 மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவில் நொரகல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் , நொரகல்ல மேல் பிரிவு, யக்தெஹிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் , பீன்கந்த தோட்டம் 1 , பீன்கந்த தோட்டம் 2 , பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவில் பீன்கந்த தோட்டம் 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை பொலிஸ் பிரிவில் ஹிந்திகிவுல கிராம உத்தியோகத்தர் பிரிவில் நக்கலவத்த மற்றும் மில்லகெலேவத்த ஆகிய கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 1850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 255 468 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 221 249 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 30 635 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை  இன்று திங்கட்க்கிழமை 41 கொவிட் மரணங்கள் சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2985 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09