ஆளும் தி.மு.க.வும் ஆளுரின் உரையும்

Published By: Gayathri

28 Jun, 2021 | 10:16 PM
image

குடந்தையான்

தி.மு.க. தலைவரான ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் திகதியன்று தொடங்கியது. அன்று சட்டப்பேரவையில் தொடக்கவுரை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அறிவிப்புகளை அரசின் சார்பில் வெளியிட்டார். 

இதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளிடமிருந்து மட்டுமல்லாமல் ஏனைய அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்ப்பை விட அதிகளவில் வரவேற்பும்,  ஆதரவும் கிடைத்து வருகிறது.

ஆனால் அவரின் உரையில் தி.மு.க.தேர்தல் தருணத்தில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளுக்குரிய அறிவிப்பு இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சியாக திகழும் அ.தி.மு.க. குற்றம்சாட்டியிருக்கிறது. 

இதனால் தமிழக ஆளுநரின் உரை தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

“ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க.வின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் இரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தெரிவித்திருந்தது. 

அது தொடர்பாக ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சியில் விவசாய கடன் இரத்துச் செய்து, அதற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்து ஒரு மாதமாகியும் விவசாய கடன் இரத்துச் செய்த பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை. 

அத்துடன் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். இதுதொடர்பாகவும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்,  மீன்பிடி தடை காலத்தில் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும், கோதாவரி -காவிரி இணைப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமை தொகை வழங்குதல் என்று தி.மு.க. தேர்தல் நேரத்தில் வழங்கிய எந்த வாக்குறுதிகள் தொடர்பான விடயங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. 

மக்கள் நலத் திட்டங்கள் பற்றி ஆளுநர் உரை இடம் பெறாததால் அது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அத்துடன் கொரோனாத் தொற்று பரவலை தி.மு.க. அரசு முறையாக கையாளததால், கிராமப்புறங்களிலும் அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் எதிர்க்கட்சித்தலைவரின் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ஐந்து இலட்சம் கோடிக்கு மேல் இருந்தது. முதலில் இதனை களைவதற்காக 'முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பொருளாதாரத் துறையில் அனுபவம் மிக்க நிபுணர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயண் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள். 

இது இந்தியாவில் எந்த மாநிலங்களும் மேற்கொள்ளாத புதிய முயற்சியாகும். தி.மு.க., அறிவையும், அனுபவத்தையும் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் கட்சி என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04