வெளிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி

Published By: Digital Desk 4

28 Jun, 2021 | 10:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்கள் 4 ஆயிரத்தி 800பேர்வரை கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 4ஆயிரத்தி 600பேர் பூரண குணமடைந்துள்ளனர்.  இவர்களில் இதுவரை 142 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்கள் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்தவர்களாகும்.

அதனால் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக பணியகத்தின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியதன் மூலம், இதற்கான அனுமதியை கொவிட் கட்டுப்படுத்தும் செயலணி வழங்கி இருக்கின்றது

அதன் பிரகாரம் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்வதற்கு தேவையான தொழில் ஒப்பந்தம், விசா அனுமதி பத்திரம் மற்றும் தொழில் நியமனம் பத்திரம் பெற்றவர்கள் கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்கள் ஊடாக தொழிலுக்கு செல்பவர்கள், அந்த முகவர் நிறுவனங்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையில் தொழிலுக்கு செல்பவர்கள் பணியகத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்கொண்டு தங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி பதிவு செய்துகொள்ளவேண்டும்.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களை பணியகத்தின் 1989என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46