இங்கிலாந்து - இலங்கை போட்டியில் பங்கெடுத்த நடுவர் பில் விட்டிகேஸுக்கு கொவிட் தொற்று

Published By: Vishnu

28 Jun, 2021 | 09:09 AM
image

இங்கிலாந்து -இலங்கைக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20  தொடரின் போது அதிகாரியாக செயற்பட்ட ஐ.சி.சி போட்டி நடுவர் பில் விட்டிகேஸ், கொவிட் -19 தெற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

விட்டிகேஸ், "நன்றாகவும் அறிகுறியற்றதாகவும்" தற்சமயம் உள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

எனினும் அவர் ஜூன் 25 முதல் அடுத்த 10 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும்.

ஜூன் 25 வெள்ளிக்கிழமை சவுத்தாம்ப்டனில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையைத் தொடர்ந்து பில் விட்டிகேஸ் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியது.

இரு அணிகளைச் சேர்ந்த அனைத்து வீரர்களும், ஆதரவு ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 

ஆனால் விட்டிகேஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய போட்டிய அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏழு அதிகாரிகளில் ஐந்து பேர் ஜூன் 29 அன்று நடைபெறும் இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பணியாற்றவிருந்தனர்.

எனினும் மேற்கண்ட தீர்மானங்களினால் இப்போது பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும்.

வரையறுக்கப்பட்ட ஓவர்களில் டி-20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வென்றது, ஒருநாள் தொடர் ஜூன் 29 செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35