சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியை கையிலெடுக்கும் சிறந்த உலகை மீண்டும் கட்டியெழுப்பும் முன்முயற்சி

Published By: J.G.Stephan

27 Jun, 2021 | 07:46 PM
image

சிறந்த உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்முயற்சிகளை ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாகவிருக்கும் நாடுகளின் கூட்டான ஜி-7 மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், காலநிலை மாற்றம், தடுப்பூசியை கிரமமாக வழங்குதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உள்ளிட்ட பல விடயங்களில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு  உதவுகின்றது.

இந்தச் செயற்பாடானது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமையில் கொள்கை ரீதியான முன்னெடுக்கும் பட்டி மற்றும் சாலை முன்முயற்சி மூலம் ஏற்படும் நேரடியான சவால்கள், அடக்குமுறை, ஆக்கிரமிக்கும் விரிவாக்கம், அடக்குமுறை, ஆகிய விடயங்களை கருத்தில் கொள்வதாக சீனாவுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. 



இந்த விடயமானது பீஜிங்கிற்கு சற்றே சுமூகமற்றதான நிலைமைகளை தோற்றுவிப்பதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் அவ்விதமான நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையில் ட்ரனின் வாயு போன்று சில சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. அந்தச் சான்றுகள் பொதுத்தளத்தில் வந்துள்ளமையும் அறியப்பட்டுள்ளது. 

அதாவது சீனாவில் கட்டாய பணிக்கமர்த்தும் செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. அண்மையில் வெளியாகியுள்ள சீனாவின் தொழிலாளர் கண்காணிப்பு அறிக்கையின் யதார்த்தம் அதனை உணர்த்துகின்றது. (சான்று: இந்தோனேசியா, அல்ஜீரியா, சிங்கப்பூர், ஜோர்டான், பாகிஸ்தான் மற்றும் செர்பியாவில் உள்ள சீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களும் என்ற அறிக்கை)

ஜி-7 கூட்டை சீனாவின் பேச்சாளர் நிராகரித்ததோடு, சிறிய குழு முழு உலகிலும் செல்வாக்குச் செலுத்த முடியாது என்றும் கூறியிருந்தார். இந்தக் கூற்று ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல. குவாட் எனப்படும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா கூட்டை, சீனாவுக்கு எதிராக அணிதிரட்ட விரும்பும் சிறு என்று குறிப்பிடும் சீனாவின் எதிர்வினையிலிருந்து மேற்படி விடயமும் மாறுபட்டிருக்கவில்லை. 

ஓன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ‘பராமவுண்ட்’ தலைவராக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உருமாறியதிலிருந்து அந்நாடு தனது இராணுவ, பொருளாதாரத்தின் நிலைமைகளை இட்டு ஆணவமான மனநிலையையும் உலகத்தின் மீதான மோகத்தினையும் கொண்டிருப்பதால் ஏனைய சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.

ஆசியா முதல் ஆபிரிக்க நாடுகள் வரையில் நன்மைகளைப் பெற்றாலும், சீனா தொடர்பிலான கவலைகள் அவற்றுக்கும் இருக்கின்றன. ஏனென்றால் சீனா தற்போது வரையில் தனது நகர்வுகளை நிறுத்தவில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. 

ஜனநாயகம் தொடர்பாக அந்த நாட்டுக்கு பலத்த விமர்சனங்கள் தொடர்ந்தாலும் தனது வளர்ச்சியை மையப்படுத்திய நடவடிக்கைகளை கைவிடவில்லை. குறிப்பாக எண்ணுக்கணக்கற்ற தொகையான டொலர்களை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. இதனால் உலகில் உள்ள கண்டங்கள் முழுவதும் நண்பர்களை பெற்றுக்கொள்வதற்கு சீனாவுக்கு அது உதவியாக உள்ளது.

 

அண்மைய நாட்களில் உய்குர் முஸ்லிம்கள், பட்டி மற்றும் பௌத்தம் திட்டத்தல் திபெத்தை மிருகத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருத்தல், ஹொங்கொங்கில் ஜனநாயக இயக்கங்கள் மீதும் ஊடகங்கள் மீதும் இரக்கமற்ற செயற்படுகளை முன்னெடுக்கின்றமை கண்களையே கூசச் செய்கின்றன. இவ்விதமான செயற்பாடுகள் உலகின் ஜனநாயக வலதுசாரி அரசியலில் கவலைகளை ஏற்படத்துவதாக உள்ளது.

சீனா முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பிலான எதிர்மறையான விடயங்கள் மற்றும் விமர்சனங்கள் அதனை பாதிக்கவில்லை. மாறாக சீனாவின் அக்கiறாயனது மேற்கில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் பற்றியதாகவே உள்ளது. அதேநேரம், அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தனது நகர்வுகளை முன்னெடுப்பதில் சீனாவுக்கு காணப்படுகின்ற நெருக்கடிகள் போன்று மிகப்பெரிய ஆபிரிக்க கண்டத்தை நோக்கி திட்டங்களை நகர்த்துவதில் நெருக்கடிகள் ஏற்படாது. 

அதேநேரம், ஆசிய, ஆபிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் அதிகமாக இருப்பதன் காரணமாக சீனா, அதிகளவான பணத்தினை இவ்விரு கண்டங்களில் உள்ள நாடுகளுக்கும் வழங்கி வருகின்றது. 

இந்தப் பணத்தினை வழங்கும்போது, அந்த நாடுகளில் ஜனநாயகம், கருத்துவேறுபாடு, உள்நாட்டு வெளிநாட்டு வெறுப்பு நிலைமைகள் உள்ளிட்ட எதனையும் சீனா கருத்தில் கொள்வதில்லை. தனது பணத்திற்கு இவ்விதமான எந்தவொரு வண்ணங்களும் இல்லை என்ற நிலையிலேயே உள்ளது. 

குறிப்பாக கூறுவதானால், சீனா பணம் வழங்கும் ஆசிய, ஆபிரிக்க நாடு ஜனநாயக ரீதியாக நடத்தப்படுகின்றதா அல்லது ஒரு கொடுங்கோலரால் ஆளப்படுகின்றதா என்பதைக் கூட சீனா அதிகம் பொருட்படுத்துவதில்லை. அதேநேரம், இந்த கண்டங்களின் நாடுகள் சீனாவின் தொழிலாளர்களுக்கும் இடமளிக்கும் நிலையினைக் கொண்டிருக்கின்றன. 

அத்துடன், இவ்விதமாக சீனாவிடமிருந்து உதவியைப் பெறும் நாடுகளில் சீனா ஆயுதங்கள் தரித்தவாறு திறந்த நடமாட்டத்தினையும் கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்குலக நாடுகள் அவ்விதமாக செயற்படுவதில்லை. அந்நாடுகள் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்படுகின்றன. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்ட பெறுமதியான விடயங்களைப் பின்பற்றுகின்றன. 

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் சீனாவின் பட்டு மற்றும் பதை முன்முயற்சி திட்டத்தினை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இதனைத்தொடர்ந்து பல பில்லின் டொலர்கள் பெறுமதியான சீன-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் மறுபக்கத்தில் சர்வதேச நாணய நிதியம், எப்.ஏ.ரி.எப்.ஏ.உள்ளிட்ட நிதிக்கட்டமைப்புக்களில் தம்மை பிணை எடுக்கமாறு அமெரிக்காவின் கதவினை பாகிஸ்தான் தட்டுகின்றது. அதுமட்டுமன்றி ஆப்கானிஸ்தானின் நன்நடத்தை பற்றியும் கவனம் செலுத்துவதாக மிகைப்படுத்திக் காண்பிக்கின்றது. 

ஏவ்வாறாயினும், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் தாங்களாகவே சிக்கிவிட்டன. இவ்வாறு பாகிஸ்தான் பயணிக்கும், படகினை ஒத்த படகில் தான் இலங்கை, மியன்மார் ஆகியனவும் பயணிக்கின்றன. அதுபலவீனமான நிலையாகும். 

சீனா அண்மைக்காலமாக உலகைக் கவர்ந்திழுக்கும் பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. ஆனல் மேற்கு நாடுகளில் காந்தாக கவர்ந்திழுப்பதைப் போன்ற நிலைமைகள் இன்னமும் சீனாவின் தொழிற்துறைகளில் ஏற்படவில்லை. மேற்குலக நாடுகளில் குடியற்றக் கொள்கைகள் மிகுந்த இறுக்கமானவை. ஆனல் சீனாவில் குடியேற்ற விடயங்களை மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட எவ்வாறிருக்கின்றது என்று கூட கேட்காத நிலைமையே உள்ளது. 

அமெரிக்கா, பீஜிங்க உள்ளிட்ட இளைஞர்களுக்கு ஈ.ஐ.ரொரட்டோவை தொடர்ச்சியாக நினைவூட்டி வருகின்ற நிலையில், மூன்றாம் உலக நாடுகளில் கூட சீன, கரியத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது நல்லதல்ல. 

சீனா, தனது வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கும் ஏழை நாடுகள், சீனா எதிரியாக கருதும் பி3டபிள்யூ முன்முயற்சியை முன்னெடுக்கும் நாடுகளுடனும் உறவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்த உறவுகளையும், பி3டபிள்யூ முன்முயற்சியை வலுவிழக்கச் செய்வதற்காகவும் மூவாயிரம் திட்டங்களை இணைத்துள்ளது. இதனால் குறுகிய காலத்தில் பி3டபிள்யூ முன்முயற்சி முடக்கம் செய்யப்படலாம் என்று சீனா கருதுகின்றது. 

எவ்வாறாயினும், ஜி-7நாடுகள் முன்னேறத் தீர்மானித்திருந்தால் வளரும் நாடுகளின் இதயங்களை சீனா வெல்லவில்லை என்பதை அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் நம்பகரமான தரப்புக்களிடத்திலிருந்தே கண்டறியலாம். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22